“மகுடம்” விமர்சனம்

நாயகன் விஷால் மருந்து விற்பனையாளராக வேலை பார்க்கும் ஒரு நடுத்தர குடும்ப தலைவர்.அவரது மனைவி துஷாரா குடும்பத்தலைவி.இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள்.விஷாலின் நீண்டநாள் ஆசை சொந்தமாக கார் வாங்கி அதில் தனது குடும்பத்துடன் பயணம் செய்ய வேண்டும் என்பதுதான்.அதற்காக சிறிது சிறிதாக பணம் சேர்த்து ஒரு பழைய காரை விலைக்கு வாங்குகிறார் விஷால்.அந்த காரில் தனது குடும்பத்துடன் பயணம் செய்கிறார்.அப்படி பயணம் செய்யும் போது அவர்களை ஒரு ரவுடிக் கும்பல் வழி மறித்து விஷாலின் மனைவி துஷாராவையும் அவரது மகளையும் கொலை செய்துவிட்டு தப்பிவிடுகிறார்கள்.உயிர்தப்பிய விஷால் கொலையாளியை கண்டுபிடித்து பழிவாங்க துடிக்கிறார். அந்த கொலையை செய்தவர் ரவுடிக் கும்பலின் தலைவனாக இருக்கும் விஷாலின் தந்தைதான் என்பது விஷாலுக்கு தெரியவருகிறது.மகனின் குடும்பத்தை கொலை செய்ய காரணம் என்ன தன் மனைவியையும் மகளையும் கொன்ற தந்தையை விஷால் பழி தீர்த்தாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.
தந்தை,மகன் என இரு கதாபாத்திரங்களையும் ஏற்று விஷால் சிறப்பான முறையில் வித்தியாசம் காட்டி சிறப்பாக நடித்திருக்கிறார்.
துஷாரா விஜயன் தனது நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார்.
மற்றும் அஞ்சலி,ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் ஆகியோரின் ஒளிப்பதிவும்,ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையும் கதைக்கு கூடுதல் பலம்.
விஷால் நடிகராக மட்டும் இல்லாமல் வழக்கமான பழிவாங்கும் கதைக்களமாக இருந்தாலும் புதுமையான காட்சிகளை சேர்த்து சிறந்த திரைக்கதை அமைத்து இயக்கி சிறந்த இயக்குனராகவும் தன்னை நிரூபித்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள்.
மகுடம் சிறப்பான மணி மகுடம்.