மிசஸ் & மிஸ்டர் விமர்சனம்

நடிகையாக இருந்த வனிதா விஜயகுமார் இப்படத்தில் நடித்திருப்பதுடன் அடுத்த கட்டமாக டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.செஃப்‌ ராபர்ட்டை திருமணம் செய்துகொள்கிறார் வனிதா.தம்பதிகள் இருவரும் சந்தோஷமாக தங்களது வாழ்க்கையை வாழ்ந்தாலும் தனக்கு குழந்தை இல்லையே என்ற வருத்தம் வனிதாவுக்கு அதிகரிக்கிறது.ராபர்ட்டோ குழந்தை பெற்றுக் கொள்ள சம்மதிக்க மறுக்கிறார்.பலர் பல்வேறு அறிவுரை கூறினாலும் என் கணவருக்குத்தான் பிள்ளை பெறுவேன் செயற்கை முறையில் வேறு ஒருவரின் விந்தணு மூலம் குழந்தை பெறமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார் வனிதா இந்தநிலையில் வனிதா கர்ப்பமாகிறார்
ஆனால் அதற்கு தான் காரணமில்லை என்று ராபர்ட் கூறுகிறார்.இதனால் கோபித்துக்கொண்டு வனிதா பிரிந்து செல்கிறார்.பிறகு என்ன நடந்தது பிரிந்து சென்ற ராபர்ட் திரும்ப வனிதாவுடன் இணைந்தாரா வனிதாவின் கர்பத்திற்கான காரணம் என்பதுதான் படத்தின் மீதிக்கதை. வனிதா விஜயகுமார் டைரக்டராக இல்லாமல் அதிக கவர்ச்சியாகவும் திறமையாகவும் தனது பணியினை சிறப்பாக செய்துள்ளார். ராபர்ட் மாஸ்டர் வனிதாவுக்கு இணையாக தனது நடிப்பினை சிறப்பாக வழங்கியுள்ளார். மற்றும் ஷகிலா,ஶ்ரீமன், அனுமோகன்,ஆர்த்தி,கணேஷ்,கும்தாஜ், பாத்திமா பாபு,செஃப் தாமு,கிரண், ரவிகாந்த் ஆகியோர் தங்களது பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஶ்ரீகாந்த் தேவா அவர்களின் இசையும், ராஜபான்டி, விஷ்ணு ராமகிருஷ்ணன், டி. ஜி. கபில் ஆகியோரது ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.கணவன் மனைவிக்கு இடையே ஆன உறவு முறைகளை மிக நேர்த்தியான முறையில் தநதுள்ள இயக்குனர் வனிதா விஜயகுமாருக்கு பாராட்டுகள்.
ஜோவிகா விஜயகுமாரின் தயாரிப்பில் மிசஸ் & மிஸ்டர் எதார்த்தம்.