கதையின் நாயகன் ஶ்ரீராம் கார்த்திக் வைல்டு லைப் போட்டோகிராபர் அரிதான பறவைகளை புகைப்படம் எடுக்க ஊட்டிக்கு வருகிறார்.அங்கு வெகுளித்தனமாக பேசித் திரியும் க்ருஷா க்ரூப்பை சந்திக்கின்றார் அவர் மீது காதல் கொள்கிறார்.அவளிடம் காதலை சொல்ல முயலும்போது தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவரிடம் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று க்ருஷா கேட்கிறாள்.ஷாக் ஆன ஶ்ரீராம் தன் காதலை மறைத்துக் கொண்டு க்ருஷாவை அவளது காதலனுடன் சேர்த்து வைக்க முயற்சிக்கிறான்.க்ருஷாவின் காதலன் வரமாட்டான் என்றுஎண்ணிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் திடீரென வந்து நிற்பதும் ஆனால் தான் உண்மையில் ஶ்ரீராமை காதலிப்பதை உணரும் க்ருஷா என்ன முடிவு எடுக்கிறார் என்பதே மீதிக்கதை.
ஶ்ரீராம் கார்த்திக் தனது மென்மையான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விடுகிறார்.
க்ருஷா க்ரூப் வெகுளித்தனமாகவும் இயல்பாகவும் நடித்து ஸ்கோர் செய்துள்ளார்.
மற்றும் முனிஷ்காந்த்,சிங்கம் புலி அவர்கள் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.
இசைஞானி இளையராஜாவின் இசையும், ஒளிப்பதிவாளர் செழியனின் ஒளிப்பதிவும் கதைக்கு வெகுவான பலம்.
90களின் காலக்கட்ட கதை மாதிரி அமைத்து சிறந்த திரைக்கதை அமைத்து இந்த காலகட்டத்திற்கு ஏற்றது போல் இயக்கி இருக்கும் இயக்குனர் அஜயன் பாலாவிற்கு பாராட்டுகள்.
மைலாஞ்சி இசையும்,காதலும் கலந்த மாற்றும் ஒரு மைல்கல்.
