கதையின் நாயகன் அஜய் தீஷன் தானென்ற அகந்தை மமதை காரணமாக தான் காதலித்து வந்த காதலி தனுஷாவை பிரியநேரிடுகிறது.காதலை மறக்க ஆன்மிக பாதைக்கு திரும்புகிறார் தனுஷா.அஜயும் தன் காதலை மறக்க உடற்பயிற்சி,நண்பர்கள் என மாறுகிறார்.இருவருக்கும் இன்னொரு காதல் வருகிறது.ஆனாலும் இருவருமே தங்களது முந்தைய காதலை மறக்க முடியாமல் தவிக்கிறார்கள்.கடைசியில் இருவரும் என்ன முடிவெடுத்தார்கள்.எந்த காதலை ஏற்றுக் கொண்டார்கள் என்பதுதான் மீதிக்கதை கதை.
அஜய் தீஷன் தனது துறுதுறு நடிப்பால் அனைவரது மனதிலும் இடம்பிடித்துள்ளார்.
நாயகி தனுஷா கதைக்கு பலமாக எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தி சிறந்த முறையில் நடித்துள்ளார்.
மற்றும் ஷியரா,சுனில்,லட்சுமி மஞ்சு, பாண்டியராஜன்,ஸ்ரீராம்,ராதா ஆகியோர் தங்களது பணிகளை சிறப்பாக செய்துள்ளனர். விஜய் ஆண்டனி அவர்களின் எடிட்டிங் மற்றும் இசை படத்திற்கு கூடுதல் பலம்.
இன்றைய இளைஞர்களின் உள்ளார்ந்த உணர்வை தெளிவாக திரையில் காட்டி சிறந்த முறையில் ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் இயக்குநர் கணேஷ் சந்திரா அவர்களுக்கு பாராட்டுகள்.
“பூக்கி”இளைஞர்களுக்கான கொண்டாட்டம்.
