நந்தன்’ விமர்சனம்

 

பாலாஜி சக்திவேல் ஊராட்சி மன்ற தலைவராக காலம் காலமாக அவரது குடும்பம் மட்டுமே ஆண்டு வருகிறது.
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அந்த குடும்பத்தை எதிர்த்து போட்டியிட்டாலோ இல்லை முயற்சி செய்தால் கூட அவர்களை அழித்து விடுகின்றனர்.
இந்த முறையும் தேர்தலில் போட்டியே இல்லாமல் வெற்றிபெற இருக்கும் மகிழ்ச்சியில் பாலாஜி சக்திவேல் இருக்கும்போது அவருக்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வந்து சேர்கிறது. வணங்கான்குடி ஊராட்சி ரிசர்வ் தொகுதியாக மாற்றி அறிவிக்கப்படுகிறது.
இனி தான் போட்டியிட முடியாது என தெரிந்துகொண்ட பாலாஜி சக்திவேல் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்த உழைப்பாளியான தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த சசிகுமார் தீவிர விசுவாசியான வேலைக்காரராக பாலாஜி சக்திவேலிடம் இருக்கிறார்.
தன் சார்பாக தேர்தலில் சசிகுமாரை போட்டியிட வைக்க முடிவு செய்கிறார்.
தன் சார்பாக சசிகுமாரை நிற்க வைத்து அவரை வெற்றிபெற செய்கிறார். வெற்றிப்பெற்ற பின் அவரை சொன்னதை செய்யும் பொம்மையாக ஆட வைத்துக்
கொண்டு பாலாஜி சக்திவேல் கிராம தலைவராக கிராமத்தை ஆண்டு வருகிறார். தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த
சசிகுமாரை ஜாதி பார்த்து எந்தளவு கீழ் மட்டமாக பாலாஜி சக்திவேல் நடத்தும் இந்த நிலையில் சசிகுமாரின் தாய் இறந்து போக அடை மழை காரணமாக சுடுகாட்டில் பிணத்தை எரிப்பதில் பாலாஜி சக்தி வேலுக்கும் சசிகுமாருக்கும் ஏற்படும் பிரச்சனையில் உயர் அதிகாரி சமுத்திரக்கனியை சந்தித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சுடுகாடு தேவை என ஊராட்சி மன்ற தலைவரான சசிகுமார் புகார் கொடுக்கிறார்.

சசிகுமாரின் செயலால் ஆத்திரமடையும் பாலாஜி சக்திவேல் சசிகுமாரை கிராம மக்கள் முன்னிலையில் முழு நிர்வாணமாக்கி ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து கிராமத்தை விட்டு துரத்துகிறார்.
அதன் பின் இன்னோரு தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த மற்ற ஒருவரை நிற்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் பாலாஜி சக்திவேல்.
பாலாஜிசக்திவேலின் ஆணவத்தையும், அட்டூழியத்தையும் முறியடித்து மீண்டும் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை சசிகுமார் கைப்பற்றினாரா கிராம மக்களை காப்பாற்றினாரா என்பதே மீதிக்கதை.
கதையின் நாயகனாக சசிகுமார் கூழ் பானை என்ற கதாபாத்திரத்தில் படம் முழுவதும் கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அசத்தலான நடிப்பில் வில்லனாக மிரட்டியிருக்கிறார் பாலாஜி சக்திவேல்.
கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி பெரியசாமி.
மற்ற கதா பாத்திரங்களான துரை சுதாகர், சமுத்திரக்கனி,ஸ்டாலின்,வி.ஞானவேலு, ஜி.எம்.குமார்,சித்தன் மோகன்,சக்தி சரவணன் ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஆர்.வி.சரவணனின் ஒளிப்பதிவும், ஜிப்ரான் இசையில் பாடல்களும்,பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம் அமைந்துள்ளது.
ஜாதி அரசியல் அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளை சந்திக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் அவல நிலைகளை எதை பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக காட்சிகளால் படமாக ரசிகர்கள் கண் முன் நிறுத்தி இருக்கும் இயக்குனர் இரா.சரவணனை பாராட்டியே ஆகவேண்டும்.
நந்தன் ஜாதி வேறுபாட்டில் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்காக குரல் கொடுப்பவன்.