நேற்று இந்த நேரம் விமர்சனம்

படத்தின் முதல் காட்சியிலேயே படத்தின் ஹீரோ ஷாரிக்கைக் காணவில்லை என்று தான் படம் ஆரம்பிக்கின்றது இந்த நிலையில் விசாரணையின் போது ஒவ்வொருவரும் சொல்லும் பிளாஷ்பேக்கில் தான் ஷாரிக் வந்து போகிறார் இதனால் முழுப் படத்திலும் அவரைப் பார்க்க முடிகிறது.
ஷாரிக் ஹசன்,திவாகர் குமார்,நிதின் ஆதித்யா,அரவிந்த்,ஹரிதா,மோனிகா ரமேஷ்,காவ்யா அமீரா உள்ளிட்ட நண்பர்கள் குழு ஒன்று கூடி ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறது.
சென்ற இடத்தில் ஹீரோ ஷாரிக்கைக் காணவில்லை என்று ஹீரோவின் நண்பர் அரவிந்த் போலீசுக்கு சொல்ல விசாரணை வளையத்துக்குள் அனைத்து நண்பர்கள் குழுவும் வருகிறது.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும்போது ஷாரிக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வரும் நிலையில் இறுதி விசாரணையின் போது புகார் கொடுத்த நண்பர் அரவிந்தையும் காணவில்லை.
ஷாரிக் கொலை செய்ய பட்டாரா அவரை கொன்றது யார் புகார் தந்த நண்பர் அரவிந்த் என்னவானார் என்பதே மீதிக்கதை.
ஷாரிக் அழகாகவும் இருக்கிறார் திறமையாகவும் நடித்துள்ளார்.
படத்தின் ஹீரோயின் ஹரிதா ஷாரிக்கின் காதலியாக வருகிறார் இவரும் சிறப்பாகவே தமது பணியினை செய்துள்ளார்.
படத்தின் ஏனைய கலைஞர்களான திவாகர் குமார்,நிதின் ஆதித்யா, மோனிகா ரமேஷ், காவ்யா அமீரா விசாரணை செய்யும் இன்ஸ்பெக்டராக வருபவர் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாகவே பங்களித்து இருக்கிறார்கள்.
விஷால் எம் மின் கேமராவும்
கெவின் என் னின் இசையும் படத்திற்கு ஓரளவு பலம் சேர்த்துள்ளன.
கதை திரைக்கதையை எழுதி இயக்கி இருக்கும் சாய் ரோஷன் கே.ஆர்  நன்றாகவே எழுதி இயக்கியிருக்கிறார் பாராட்டுகள்.
நேற்று இந்த நேரம் இளைஞர்களுக்கான சஸ்பென்ஸ் த்ரில்லர்.