“ஒரு நிமிஷம் இருங்க”

 


“ஒரு நிமிஷம் இருங்க” என்று சொன்னாலே, அனைவரின் கவனமும் அங்கு திரும்பும். அப்படி தன் பக்கம் கவனத்தை திரும்ப வைத்து, சோசியல் மீடியா மூலம், மக்களுக்கு பல நல்ல தகவல்களை அளித்து, பிரபலமானவர் லண்டன் டயானா மகேந்திரன்! திரை கலைஞர்கள் பலரை அழகு படுத்திய, அழகானவர். நடிக்க பல இயக்குனர்கள் அழைப்பு விடுத்தும், ஏற்காமல் இருக்கிறார். ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆர்வம் கொண்டுள்ளார்! விரைவில் தமிழ் ரசிகர்களை, தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் சந்திக்க உள்ளார்!

“ஒரு நிமிஷம் இருங்க”
வணக்கம் நான் டயானா மகேந்திரன் அழகுக்கலை நிபுணர்.& மேக்கப் ஆர்டிஸ்ட். health and social care& nursing top-up BSc படித்து முடித்து இருக்கேன்.
16 வயதில் எனது 2005 முதல் அழகு கலையை ஆரம்பித்ததேன். எனக்கு முதலடியை போட்டு கொடுத்தவர்கள் அபர்ணா பாலநாதன். பிறகு சென்னையில் 6 மாத காலமாக அழகு கலை நிபுணர் திருமதி வசந்த் ராவிடம் அவர்களிடம்  பயிற்சி பெற்றேன்.
பிறகு சினிமா கலைஞர்களுக்கும் திருமண நிகழ்ச்சி களுக்கும் எனது பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன்.
பிறகு லண்டன் கனடா மலேசியா என பல நாடுகளுக்கு எனது மேக்கப் பணியை தொடர்ந்து பிசியாக பறந்து கொண்டிருந்தேன்
ஆனால் எனது உழைப்பிற்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை.
அதன் பிறகுதான் டிக் டாக் செய்து “ஒரு நிமிஷம் இருங்க” என்று எனது திறமையை வெளிப்படுத்தினேன். மேக்கப் கலையில் பிரபலம் ஆனேன். இப்போது எல்லோருக்கும் அழகு குறிப்புகள் அலங்காரம் மற்றும் சொந்த தயாரிப்பில் தயாரித்து. கிரீம் முகப்பொலிவு தேவையான அனைத்து சாதனங்களும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் என்னை ஊக்குவித்த கோடான கோடி மக்களுக்கு நன்றி சொல்லி என்னை மென்மேலும் வளர வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி…. டயானா மகேந்திரன்
லண்டன்