படையா​ண்ட மாவீரா விமர்சனம்

காடுவெட்டி குருவாக கதையின் நாயகன் வ.கௌதமன் களமிறங்கி இருக்கிறார். பள்ளியில் படிக்கும் மாணவன் தமிழ் கௌதமன் தந்தை சமுத்திரகனி அந்தப் பகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து பெரிய மனிதராக வலம் வருகிறார். இவரின் வளர்ச்சியை பிடிக்காத ஆடுகளம் நரேன் சமுத்திரகனியிடம் வீண் சண்டையிட்டு கொலை செய்து விடுகிறார். இதனை நேரில் பார்க்கும் சிறுவன் வளர்ந்து பெரியவனாகி வ.கௌதமன் தந்தையை கொன்றவரை தலையை துண்டித்து பழி வாங்கி,சிறைத் தண்டனை அனுபவித்து வெளியே வந்த பிறகு தனது சமூகத்தை மட்டுமின்றி,அனைத்து சமூகத்தையும் சமமாக கருத,எந்த பிரச்சனை என்றாலும் மக்களுக்காக எதையும் செய்யத் தயங்காத ஆளுமை படைத்த ஒரு தலைவராகவும் பாதுகாவலராகவும் மாறுகிறார்.அவரது அசுர வளர்ச்சி, அரசியலில் சலசலப்பை ஏற்படுத்துகிறது. அரசாங்க அதிகாரிகள்,உயர் சாதியினர், அரசியல் மற்றும் சமூக அழுத்தங்களுக்கு எதிராக வ.கௌதமனின் கடினமான பயணம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி அனைத்து மதத்தினரும் அவரது பின்னால் நிற்பதும்,அவர்களை பாதுகாப்பதே குறிக்கோளாக இயங்க, அதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. இறுதியில் காடுவெட்டி குரு மக்களின் நலனுக்காக பாடுபட்டு என்ன நிலைமைக்கு உள்ளானார் அவர் முன்னெடுத்த காரியங்கள் வெற்றி பெற்றதா உடல் நலம் தேறினாரா என்பதே படத்தின் மீதிக்கதை. காடுவெட்டி குருவாக கதையின் நாயகன் கௌதமன் காடுவெட்டி குருவாக வாழ்ந்துகாட்டிள்ளார்.தந்தையாக சமுத்திரக்கனி, தாயாக சரண்யா பொன்வண்ணன் மனைவி பூஜிதா இவர்களின் நடிப்பு யதார்த்தம்.
மற்றும் ஆடுகளம் நரேன்,மன்சூர் அலிகான், இளவரசு,ரெடின் கிங்ஸ்லி,பாகுபலி பிரபாகர்,மதுசுதனன் ராவ் ஆகியோர் அவர்களது பணியினை சிறப்பாக செய்துள்ளனர்.
வைரமுத்து அவர்களின் பாடல் வரிகளும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் மற்றும் சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.
ஒளிப்பதிவாளர் கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு அனைத்து காட்சிகளுக்கும் வலு கொடுத்துள்ளது.
காடுவெட்டி குருவின் வாழ்க்கை நிகழ்வுகளுடன் கொஞ்சம் கற்பனை சம்பவங்களை இணைத்து கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே முன்னிலைப்படுத்தி காடுவெட்டி குருவின் கதையை மிகச்சிறந்த முறையில் நமக்கு தந்துள்ள இயக்குனர் வ.கௌதமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,பாராட்டுகள்.
படையாண்ட மாவீரா மக்கள் மனதிலும் ஆட்கொண்டு விடுவான்.