கிஸ் விமர்சனம்

கதையின் நாயகன் கவின் காதலை வெறுக்கும் கிடார் கலைஞர் கவின் கூடவே தந்தையின் மீதும் வெறுப்பில் இருக்கிறார்.சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் அவரது தாய் தேவயானி கணவன் ராவ் ரமேஷை விட்டு பிரிந்து தன் பிள்ளைகள் இருவருடன் தனியாக வசிக்கிறார். எதிர்பாராத விதமாக ப்ரீத்தி அஸ்ரானி சந்திக்க, அந்த பெண் நெல்சன் என்ற பெயர் அட்டையில் எழுதப்பட்ட ஒரு பழங்கால புத்தகம் கிழே கிடந்ததாக சொல்லி கொடுத்து விட்டு போகிறார். அந்த புத்தக​ம் கைக்கு வந்தபிறகு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. கவினுக்கு ஒரு விசேஷ சக்தி கிடைக்க பெற்று யாராவது அவர் எதிரில் முத்தமிட்டுக் கொள்வதை கண்டால் அவர்களின் எதிர்காலம் அவரது மனக்கண்ணில் விரிய, அதன் பிறகு அசம்பாவிதத்தை தடுக்க முன்கூட்டியே நேரில் சென்று காதலை பிரித்து விடுகிறார். தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்பதை யோசிக்கும் போது தான் புத்தகம் ஞாபகம் வர இதை கொடுத்த ப்ரீத்தி அஸ்ரானியை தேடிச் செல்கிறார். ப்ளையர்ஸ் என்ற நடனப்பள்ளியை நடத்தும் ப்ரீத்தி அஸ்ரானியை பார்த்தவுடன் காதல் ஏற்பட, அங்கேயே நடனம் கற்றுக் கொள்ள சேர்கிறார்.பின் இருவருக்கும் காதல் மலர ஒரு நாள் ப்ரீத்தி அஸ்ரானி கவினுக்க திடீர் முத்தம் ஒன்றை கொடுக்கிறார். அப்போது கவினுக்கு எதிர்காலத்தில் தன் காதலிக்கு மரணம் ஏற்படக் போகிறது என்பது கண் முன்னால் தெரிகிறது. அதனால் அவர் தன் காதலியிடமிருந்து விலகி செல்கிறார். இறுதியில் ப்ரீத்தி அஸ்ரானிக்கு உண்மையான காரணம் தெரிந்ததா கவினின் மனதை புரிந்து கொண்டாரா எதிர்கால கனவு போல் உண்மையில் நடந்ததா கவினுக்கு இந்த விசித்திரமான சக்தி வர காரணம் என்ன மர்ம புத்தகத்தின் பின்னணி என்ன காதலர்கள் மீண்டும் இணைந்தார்களா தந்தையின் மீது கவினுக்கு இருக்கும் வெறுப்பு தணிந்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.
நெல்சனாக கவின் காதலை வெறுப்பதற்கு முன் தந்தையை வெறுக்கிறார்,தந்தையின் பாசத்தை நிராகரிக்கும் போதும் பின்னர் உணரும் போதும் கச்சிதமாக செய்திருக்கிறார்.
சாரா வில்லியமாக ப்ரீத்தி அஸ்ரானி அழகிலும் நடிப்பிலும் அசத்துகிறார்.
மற்றும் விடிவி கணேஷ்,சக்தி, ஆர்.ஜே.விஜய், ராவ் ரமேஷ்,தேவயானி, பிரபு, கௌசல்யா,டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மற்றும் பலர் சிறப்பாக நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையும், ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
பல செண்டிமென்ட் திருப்பங்களுடன் கற்பனை கலந்து இளைஞர்களுக்கான ஒரு படமாக இளமை துள்ளலுடன், நகைச்சுவையுடன் வழங்கி இருக்கும் நடன இயக்குனராக சாதனைகளை செய்த இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் கிஸ் படத்தின் மூலம் பட இயக்குனராக முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள்.
கிஸ் இளைஞர்களுக்கான ஒரு படமாக இளமை துள்ளல்.