பரமசிவன் பாத்திமா விமர்சனம்

யோகோபுரம் கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் வாழும் பகுதி சுல்தான்பேட்டை பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழும் பகுதி இந்த இரு பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் மதத்தால் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் இந்த இரண்டு நகரங்களிலிருந்தும் வருங்கால மணமக்கள் அவர்களின் பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பு இரவில் அடர்ந்த காட்டுக்குள் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கும் சம்பவங்கள் நடக்கிறது.இதனை விசாரிக்க தனிப்படையுடன் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் காட்டிற்குள் முகாமிட்டு தங்குகிறார்.கிராமத்தில் இரு மதங்களின் மக்கள் அனைவரையும் விசாரிக்கும் போது எந்த வித தடயங்களும் கிடைக்காமல் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது.இந்த கொலைகளால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இப்படி இருக்கும் நிலையில் மத மாற்றத்தால் பிரிக்கப்பட்ட குழந்தைப் பருவ காதலர்களான ​விமல் மற்றும் சாயா தேவி இருவரும் கொலை செய்யப்படுகிறார்கள்,மேலும் அவர்களின் குறைகள் அனைத்தும் இப்படி பழிவாங்கும் ஆவிகளாக வெளிப்பட்டு செயல்பட்டு வருகின்றன.இந்த கிராமத்தில் மதத்தால் ஏன் பிரிவினை நடந்தது விமல் மற்றும் சாயாதேவி யார் யாரையெல்லாம் எதற்காக ஏன் இந்த கொலைகளை செய்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.பரமசிவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விமல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.பாத்திமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி சாயா தேவி தனது நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.மற்றும் இசக்கி கார்வண்ணன்,வில்லனாக நடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் சுகுமார், கூல்சுரேஷ்,அருள்தாஸ்,ஸ்ரீரஞ்சனி, மனோஜ்குமார்,ஆதிரா,சேஷ்விதா, விமல்ராஜ்,மகேந்திரன்,காதல் சுகுமார், ஆறு பாலா,வீரசமர்,களவாணி கலை அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.தீபன் சக்ரவர்த்தி அவர்களின் இசையும்,ஒளிப்பதி​வாளர் எம்.சுகுமார் அவர்களின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம். அரசியல் மதமாற்றத்தால் எப்படி குடும்பங்கள் பிரிக்கிறது,சொந்தங்கள் இடையே எப்படி பிரிவினையை ஏற்படுத்துகிறது, இதனால் ஏற்படும் கொலைகள் என கிறிஸ்தவ,இந்து மற்றும் முஸ்லீம் மதங்களை அடிப்படையாக வைத்து குழப்பமான திரைக்கதை அமைத்து சிறந்த முறையில் இயக்கியுள்ளார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் அவருக்கு பாராட்டுகள்.
பரமசிவன் பாத்திமா அனைவரும் பார்க்க வேண்டிய படம்.