’ராஜ பீமா’’  விமர்சனம் !

கதையின் நாயகனும் நாசரின் மகனான ஆரவ் பள்ளி பருவத்தில் யானை பொம்மைகளின் மேல் அதிக பற்று கொண்டவராக  இருக்கிறார் .
ஒரு நாள் காட்டு யானையை வழியில் பார்த்தவுடன் சந்தோஷமாகி விட நாசரின் ஒப்புதலுடன் அந்த யானையை பீமா என்கிற பெயருடன் சிறிய வயதிலிருந்து தனது நண்பனாக வீட்டில் செல்லமாக வளர்க்கிறார். இது ஒரு புறம் இருக்க,
மற்றொரு பக்கம் ஜாதகத்தின் மேல் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் அமைச்சரான  கே எஸ் ரவிக்குமார் பிச்சை எடுத்து பிழைப்பை நடத்தும் யோகி பாபுவை மகனாக பாவித்து ஜாதக முறைப்படி அவரை வளர்த்து வருகிறார், இந்நிலையில் கே எஸ் ரவிக்குமாரின் வலது கரமாக இருக்கும் ஜெயகுமாரின் மகளான நாயகி ஆஷிமா நார்வாலை நாயகன் ஆரவ் காதலிக்கிறார்.
இந்தநேரத்தில் முதலமைச்சரான சாயாஜிக்கும்  அமைச்சரான  கே எஸ் ரவிக்குமாருக்கும் ஏற்படும் பிரச்சனையில் முதலமைச்சரான சாயாஜிக்கு ஆதரவாக கே எஸ் ரவிக்குமாரின் வலது கரமாக இருக்கும் ஜெயகுமார் பதவிக்கு ஆசைப்பட்டு கே எஸ் ரவிக்குமாருக்கு எதிராக அப்ருவராக மாறுகிறார்.
இந்தநிலையில் நாயகன் ஆரவ் வீட்டில் செல்லமாக வளர்த்து வரும் யானையை வனத்துறை அதிகாரிகள் பிடித்து செல்கின்றனர்.
நாயகன்  ஆரவ் வனத்துறை அதிகாரிகளிடம் யானையை அரசு சான்றிதழுடன் முறைப்படி யானையை வளர்ப்பதற்கான உரிமையை வனத்துறை அதிகாரியிடம் காண்பித்து  அவர்கள் அனுமதியுடன் மீண்டும் தன் வீட்டிற்கு யானை பீமாவை அழைத்து செல்ல பார்க்கும்போது தான் வளர்த்த யானை பீமா அங்கு இல்லாமல் வேறொரு யானையை வனத்துறை அதிகாரிகள் காட்டுவதை கண்டு அதிர்ச்சியடைகிறார்.
இறுதியில் நாயகன் ஆரவ் வளர்த்த யானை பீமாவை கடத்திய மர்ம நபர் யார் என்ன காரணத்திற்காக அந்த யானையை அவர் கடத்தினார் கே எஸ் ரவிக்குமாரின் வலது கரமாக இருக்கும் ஜெயகுமார்  முதலமைச்சரான சாயாஜிக்கு ஆதரவாக அப்ருவராக ஏன் மாறினார் இறுதியில் உண்மையான யானை பீமாவை நாயகன் ஆரவ் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே மீதிக்கதை.
ஆரவ் பாசம்,காதல்,ஆக்க்ஷன் என முப்பரிமாண நடிப்பில் தனது கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
கதைகேற்றபடி திறமையாக நடித்துள்ளார் நாயகிஆஷிமா நார்வால்.
மற்ற கதாபாத்திரங்களான யோகி பாபு,கே எஸ் ரவிக்குமார்,நாசர்,சாயாஜி,அருவி மதன்,பாகு பலி பிரபாகர்,யாஷிகா ஆனந்த் என நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்ததிருக்கின்றனர்.
சைமன் கே கிங் இசையும்,எஸ் ஆர் சதிஷ்குமாரின் ஒளிப்பதிவும்,கோபி கிருஷ்ணா பட தொகுப்பும் படத்திற்கு பலம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் நரேஷ் சம்பத்திற்கு பாராட்டுகள்.
‘’ராஜ பீமா’’அனைவரையும் கவரும்.