நாயகன் லெனின் கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் படிக்கும் கல்லூரி மாணவர் தலைவர் மற்றும் துடிப்பான சமூக ஆர்வலர். கல்லூரியில் நடக்கும் மாணவர் தேர்தல் முறைகேடுகள் மற்றும் அநீதிகளைத் தட்டிக்கேட்கும் ஒரு போராளியாக இருக்கிறார்.அதே கல்லூரியில் படிக்கும் எம்எல்ஏ ஆர்.வி.உதயகுமார் மகள் அஸ்மின் லெனினுக்கு உறுதுணையாக ஆதரவாகவும் காதலியாகவும்,லட்சியத் தோழியாகவும் இருக்கிறார்.எம்எல்ஏ ஆர்.வி.உதயகுமார் ஒரு செல்வாக்கு மிக்க அரசியல் அதிகாரமிக்க மனிதர் மட்டுமல்ல லஞ்சம், ஊழல்,சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்.இவருக்கும் லெனினுக்கும் இடையே ஏற்கனவே ஒரு பழைய பகை நிலவுகிறது.இதற்கிடையில்,கதிரின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த ஒரு காவல் அதிகாரி,அவரைப் பழிவாங்கத் துடிக்கிறார்.எம்எல்ஏவும் காவல் அதிகாரியும் சேர்ந்து கதிரை பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ள தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சில ஆண்டுகள் கழித்து அதே கல்லூhயில் மாணவர் தேர்தல் வர அந்த தேர்தலில் போட்டியிடும் ரோகித்திற்கு எதிராக அஸ்மினின் சகோதரன் பாண்டியன் களமிறங்குகிறான்.அரசியல்வாதி மகன் என்ற ஆணவத்தில் அந்தக் கல்லூரியில் அட்டூழியம் செய்து வருகிறார்,சகோதரனின் செயல்களை சிறிதும் விரும்பாத அஸ்மின் தன் காதலன் லெனினை கல்லூரி தேர்தலில் நிற்கும் ரோகித்திற்கு ஆதரவாக களமிறங்கி,தேர்தலில் வெற்றி பெற வைக்கச் சொல்கிறாள்.அதனால் லெனின் ரோகித்திற்கு ஆதரவாக மாணவர் தேர்தலில் உதவி செய்கிறார்.இந்நிலையில் அஸ்மினின் குடும்பத்திற்கு இவர்களின் காதல் விஷயம் தெரிய வர,அஸ்மினுக்கு தன் சொந்தத்தில் ரௌடியாக வலம் வரும் மாமாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கும் வேளையில்,லெனின் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கொலை வழக்கில் சிக்கி போலீசாரிடம் மாட்டிக்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. அந்தச் சிக்கல் என்ன அவர் அந்த கொலை பழியிலிருந்து எப்படி விடுபட்டார் கல்லூரி தேர்தலில் யார் ஜெயித்தார்கள் அவரின் காதலி செய்த தியாகம் என்ன அரசியலும் தனிப்பட்ட பகையும் எப்படி இவர்கள் வாழ்க்கையை மாற்றியது என்பதுதான் மீதிக் கதை.
லெனின் மிகப்பொருத்தமான கதாபாத்திரத்தில் முதல் படம் மாதிரி இல்லாமல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
அஸ்மின் கதைக்கு வலு சேர்க்கும் ஒரு உறுதியான பெண்ணாக அதே சமயம் உணர்ச்சிகரமான காட்சிகளில் நேர்த்தியான நடிப்பையும் வழங்கியுள்ளார்.
மற்றும் ஆர்.வி. உதயகுமார்,முனிஷ்காந்த், அனு மோகன் மற்றும் பலர் சிறப்பாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் கைலாஸ் மேனன் இசையும்,ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
ஒரு அழுத்தமான கல்லூரி தேர்தல்,காதல் கலந்த கதையுடன் அரசியல் மற்றும் மர்மத் திரில்லர் பாணியை இணைத்து விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள இயக்குனர் கே.ஆர்.வினோத்திற்கு பாராட்டுகள்.
ரெட் லேபிள் கல்லூரி ஆக்க்ஷன் த்ரில்லர்.
