ஜோஜூ ஜார்ஜ் மிகப்பெரிய தாதா தன் மனைவி ஸ்வாசிகாவுடன் வாழ்ந்து வருகிறார் இந்த நிலையில் இவர்களிடத்தில் வேலை பார்க்கும் ஒருவர் இறந்து விட அவரது குழந்தையான சூர்யாவை ஸ்வாசிகா மகனாக தத்து எடுத்து வளர்க்கிறார்.
ஸ்வாசிகா இறந்துவிட,சொந்த மகனாக வளர்த்த சூர்யா மீது ஜோஜூ ஜார்ஜ் வெறுப்பை காட்டுகிறார்.
ஒரு நாள் ரயில் பயணத்தின் போது ஜோஜூ ஜார்ஜ் உயிருக்கு எதிரிகளால் ஆபத்து வர சிறுவனாக இருக்கும் சூர்யா எதிரிகளை விழ்த்தி அவரை காப்பாற்றுகிறார்.
இதிலிருந்து சூர்யாவை சொந்த மகனாக ஜோஜூ ஜார்ஜ் ஏற்றுக்கொள்கிறார்.
இந்த நிலையில் சூர்யா சிறு வயதில் தான் பார்த்த கால் நடை மருத்துவர் பூஜா ஹெக்டேவை பார்த்ததும் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்.
அடிதடி,கொலை என அனைத்திலிருந்தும் விலகி பூஜா ஹெக்டேவை திருமணம் செய்து அமைதியாக வாழ ஆசைப்படுகிறார்.
இப்படி முடிவு எடுத்த நேரத்தில் தங்க மீன் கடத்தலில் ஏற்படும் பிரச்சனையால் நடக்கும் மோதலில் ஜோஜூ ஜார்ஜ் பூஜா ஹெக்டேவை கொல்ல முயல்கிறார் இதனால் ஜோஜு ஜார்ஜ் வலது கையை சூர்யா வெட்டி விடுகிறார்.
இந்த பிரச்சனையால் சூர்யா சிறையில் அடைக்கப் படுகிறார்.
மீண்டும் வன்முறையை கையிலெடுத்த சூர்யாவை பிடிக்காமல் அவரை விட்டு விலகி விடுகிறார் பூஜா ஹெக்டே.
சிறையில் இருக்கும்போதே அந்தமான் தீவில் பூஜா ஹெக்டே இருப்பது தெரிந்ததும் ஜெயிலரின் உதவியால் அங்கிருந்து தப்பித்து அந்தமானுக்கு செல்கிறார்.
அந்த தீவில் நாசரும் அவரது மகன் விதுவும் மக்களை அடிமையாக்கி சர்வாதிகாரிகளாக
ஆட்சி நடத்தி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அடிமையாக்கப்பட்ட மக்கள் அனைவரும் திரிசூல வடிவில் வேல் முத்திரையுடன் பிறக்கும் ஒருவர் கடவுளாக வந்து தங்களை காப்பாற்றுவார் என்கிற நம்பிக்கையில் அந்தமான் தீவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .
இந்த நிலையில் திரிசூல வடிவில் வேல் முத்திரையுடன் பிறந்த சூர்யாவை காண்கின்றனர் அவரை கண்டதும் அனைவரும் தங்களை காப்பாற்ற வந்த கடவுளாக பார்க்கின்றனர்.
சூர்யா அந்தமான் தீவில் அடிமைகளாக வாழும் மக்களை காபாற்றினாரா
ஜோஜு ஜார்ஜ் சூர்யாவிடம் இருந்து தங்க மீனை கைப்பற்றினாரா
பூஜா ஹெக்டே மீண்டும் சூர்யாவுடன் இணைந்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
சூர்யா உணர்வுப்பூர்வமான காட்சிகளில் தனது இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
பூஜா ஹெக்டே இயல்பாகவும் எதார்த்தமாகவும் நடித்துள்ளார்.
மற்றும் ஜோஜு ஜார்ஜ்,நாசர்,பிரகாஷ்ராஜ், கருணாகரன்,விது,ஜெயராம் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதைக்கு பக்க பலமாக அமைந்துள்ளனர்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையும்,ஸ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.
வித்தியாசமாக படு வேகமான ஆக்ஷன் காட்சிகள் என அனைவரும் ரசிக்கும் படி ஆக்க்ஷன் படமாக படத்தை இயக்கியுள்ள இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்களுக்கு பாராட்டுகள்.
‘ரெட்ரோ’ அனைவரும் ரசிக்கலாம்.
