சாக்ஷி அகர்வாலும்,விஜய் விஷ்வாவை ஐந்து வருடங்களாக காதலிக்கிறாள்.இவர்கள் இருவரும் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பொறியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணம் ஏற்பாடுகள் நடைபெறுகிறது.இந்நிலையில் அவர்கள் திருமண ஏற்பாட்டின் போது பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன.இந்நிலையில் சாக்ஷி அகர்வால் தலைமை கட்டிட பொறியாளராக பணியாற்றும் கட்டுமான நிறுவனத்தில் கூலி பெறும் சாதாரண கட்டுமான தொழிலாளியாக வேலை செய்கிறார் செல்லக்குட்டி.தன்னுடைய தாயின் உயிரைக் காப்பாற்ற போராடுகிறார்.இவரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் பள்ளிப் பருவத்திலிருந்து சாக்ஷி அகர்வாலை சிறந்த தோழியாக பாவித்து காதலை விட நட்பு பெரிது என்று தனது தோழியின் கல்வி தேர்ச்சிக்கு உதவி செய்து அவர் தேர்வில் வெற்றி பெறாமல் போகிறார்.அத்துடன் சாக்ஷி நகரத்திற்கு சென்று விடுகிறார்.ஒரு நாள் நீண்ட வருடங்களுக்கு பிறகு சாக்ஷி அகர்வாலை அவர் வேலை செய்யும் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக இருப்பதை பார்த்ததும் இருவரும் அவர்கள் பள்ளி பருவ நட்புகளை நினைவு கொள்கிறார்கள்.இருவரின் சந்திப்பைப் பற்றி செல்லக்குட்டி தன் அம்மா அம்பிகாவிடம் கூறுகிறார்.ஒரு எதிர்பாராத விபத்து ஒன்றில் சாக்ஷி அகர்வாலும், அம்பிகாவும் சந்தித்து கொள்கிறார்கள். அம்பிகாவை மருத்துவமனையில் சேர்த்து அவரை அக்கறையுடனும்,அன்பாகவும் கவனித்ததால் சாக்ஷி அகர்வால் மீது அதிகம் பிரியம் ஏற்பட்டது என்று தன் மகனிடம் சொல்கிறார் அமபிகா.மேலும் நீ உன் தோழியான சாக்ஷி அகர்வாலை திருமணம் செய்து கொள் என்று கூறுகிறார்.தோழியை எப்படி திருமணம் செய்து கொள்வது என்ற குழப்பத்தில் செல்லக்குட்டி இருக்கும் போது அம்மா அம்பிகா மீண்டும் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.அவர் சாக்ஷி அகர்வாலை நேரில் பார்த்தால் தான் உயிர் பிழைப்பேன் என்கிறார். அம்மா மீது அதிக அக்கறை கொண்டிருக்கும் செல்லக் குட்டி அம்மாவின் பேச்சை கேட்டு தன்னுடைய தோழி சாக்ஷி அகர்வாலை சந்தித்து உதவி கேட்க திட்டமிடுகிறார்.இந்நிலையில் கட்டுமான நிறுவனத்தின் காவலாளியாக இருக்கும் ரோபோ சங்கர் சாக்ஷி அகர்வாலை கொலை செய்ய ஒரு பக்கம் முயற்சிக்கிறார். கட்டுமான நிறுவனத்தில் ரோபோ சங்கர் சாக்ஷி அகர்வாலை தாக்குகிறார்.அதை தொடர்ந்து செல்லக்குட்டி,ரோபோ சங்கரை தாக்கி சாக்ஷி அகர்வாலை கடத்துகிறார். மேலும் அவரது காதலன் விஜய் விஸ்வா, மற்றும் சாக்ஷி அகர்வால் தம்பியையும் கடத்தி விடுகிறார்.அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
சாக்ஷி அகர்வால் முக்கியமான முதன்மை கதா பாத்திரத்தில் சாராவாக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
செல்லா கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்லக்குட்டி வித்தியாசமான நடிப்பை தந்துள்ளார்.
மற்றும் அம்பிகா,விஜய் விஷ்வா,ரோபோ சங்கர்,மிரட்டல் செல்வா,பொன்வண்ணன், யோகி பாபு,தங்கத்துரை,என அனைவரும் சிறந்த நடிப்பு வெளிப்படுத்தி உள்ளனர்.
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசையும்,ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் குமார் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
நட்பு,பாசம்,காதல் என சிறந்த திரைக்கதை அமைத்து இயக்கி உள்ள இயக்குநர் செல்லகுட்டிக்கு பாராட்டுகள்.
சாரா சிறப்பு.
