அங்கம்​மாள் விமர்சனம்

எழுத்தாளர் பெருமாள் முருகனின்
‘கோடித்துணி’ என்ற சிறுகதையை தழுவி உருவாக்கப்பட்ட படம்,‘அங்கம்மாள்’
ரவிக்கை அணியாமல்,சுருட்டு பிடித்து கொண்டு மொபட்டில் பால் வியாபாரம் செய்து கொண்டு என தனக்கென ஒரு தனித்த அடையாளம் கொண்ட நடுத்தர வயதுப் பெண் அங்கம்மாள்,இவரின் மூத்த மகன் பரணி,இளைய மகன் சரண் சக்தி மற்றும் தென்றல் ரகுநாதன்,பேத்தி யாஸ்மின் ஆகியோரை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கூட்டுக்குடும்பமாக வாழ்கிறார். மூத்த மகன் படிப்பு வராமல் கூலி வேலை செய்கிறார், இளைய மகன் படித்து முடித்து டாக்டராகிறான்.தனது பேத்தியிடம் தன்னலமற்ற அன்பைப் பொழிந்து மனம் திறந்து பேசும் சுபாவம் கொண்டவர் அங்கம்மாள். மேலும் தனது சுயமரியாதையை சோதிக்கிற எதையும் அங்கம்மாள் அனுமதிப்பதில்லை. இந்நிலையில்,மருத்துவம் படித்துவிட்டு கிராமத்திற்குத் திரும்பும் இளையமகன் தனது காதலி ஜாஸ்மின் மற்றும் அவரது குடும்பத்தினரை தனது தாயிடம் அறிமுகப்படுத்த நினைக்கிறார்.ஆனால் அவர்களை தன் தாயிடம் சந்திக்க வைப்பதற்கு முன்,தனது அண்ணன் மற்றும் அண்ணி ஆகியோருடன் சேர்ந்து,தனது தாயை ஒரு ரவிக்கை அணிந்து‘அன்பாக’ நடந்துக் கொள்ளுமாறு வற்புறுத்தும் போது அங்கம்மாளின் கோபம்,எதிர்வினை என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
கீதா கைலாசம் நெல்லைதமிழ் பேசி அங்கம்மாள் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.
மற்றும் பரணி,சரண் சக்தி,தென்றல் ரகுநந்தன்,முல்லையரசி,பேபி யாஸ்மின் நடித்துள்ளனர் ஆகியோர் அவர்களது பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.
முகம்மது மக்பூல் மன்சூர் இசையும், அஞ்சாய் சாமுவேல் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
அழகான நேர்த்தியான திரைக்கதை அமைத்து சிறப்பாக இயக்கியுள்ள இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுகள்.
அங்கம்மாள் தங்கம்மாள்.