நிர்வாகம் பொறுப்பல்ல விமர்சனம்

இயக்குனர் கார்த்தீஸ்வரன் படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கதையில் கார்த்தீஸ்வரன் தலைமையில் ஆதவன் உட்பட ஐந்து பேர் கொண்ட மோசடி கும்பல் ஆன் லைன் செக்ஸ் பிளாக்மெயில், பொது மக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி குறைந்த முதலீட்டிற்கு அதிக வட்டி, குறைந்த விலையில் மொபைல் போன் என்று கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலமாகவும்,காதல் என்ற பெயரில் பணம் பறிப்பு என பல விதங்களில் மக்கள் மத்தியில் பல மோசடிகளை அரங்கேற்றி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.இந்த கும்பலை பிடிப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதி நியமிக்கப்பட்டு களம் இறங்குகிறார்.இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதி பல முயற்சிகளை மேற்கொண்ட போது இந்த கும்பலை பற்றி ஒரு துப்பும் கிடைக்காமல் அவர் திண்டாடுகிறார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியின் தீவிர வேட்டையின் போது எதிர்பாராத விதமாக மோசடி கும்பல் தலைவன் கீர்த்தீஸ்வரன் சிக்குகிறார்.அதன் பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் இயக்குனராகவும்,கதையின் நாயகனாகவும் எஸ்.கார்த்தீஸ்வரன் இருவேறு பரிமாணங்களில் தனி முத்திரை பதித்துள்ளார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நாயகி ஸ்ரீநிதி மிடுக்கான தோற்றத்தில் அனைவரது கவனத்தையும் கவர்கிறார்.
மற்றும் ஆதவன்,லிவிங்ஸ்டன்,பிளாக் பாண்டி,மிருதுளா சுரேஷ்,அகல்யா வெங்கடேசன்,லிவிங்ஸ்டன், அஸ்மிதா சிங் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசை,என்.எஸ்.ராஜேஷ் ஒளிப்பதிவு கதைக்கு பலம்.
இன்றைய நவீன ஆன்லைன் மோசடிகள் அனைத்தையும் திரைக்கதையாக அமைத்து மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக இயக்கியிருக்கும் இயக்குனர் எஸ்.கார்த்தீஸ்வரன் அவர்களுக்கு பாராட்டுகள்.
நிர்வாகம் பொறுப்பல்ல சிறந்த விழிப்புணர்வு.