சாவீ விமர்சனம்

கதையின் நாயகனான உதய தீப் தனது தந்தையின் மரணத்திற்கு இரண்டு மாமன்கள் தான் காரணம் என்கிற ஒரு சந்தேகத்தில் அவர்கள் இருவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.ஒரு மாமனான பிரேம் கே சேஷாத்ரி மகளை காதலிக்கிறார்.ஆனால்,பிரேம் கே சேஷாத்திரி அவர்கள் காதலை ஏற்க மறுத்து தனது பெண்ணுக்கு வேறு ஒரு வரன் தேடுகிறார்.இப்படிப்பட்ட நிலையில் ஒரு நாள் அந்த மாமன் ஒரு விபத்தில் உயிரிழக்கிறார்.துக்க வீட்டில் இறுதிச் சடங்குகளுக்கு உடலை வைத்திருகின்றனர். அன்று இரவு உதய தீப்,மற்றும் இன்னொரு மாமன் மகன் இருவரும் உடலைப் பார்த்துக் கொள்ளும்படி உறவினர்கள் கூறுகிறார்கள். அதன் பின் அனைவரும் அசதியில் தூங்கி விடுகின்றனர். இன்னொரு மாமன் மகன் விடியற்காலையில் புகை பிடிக்க வெளியே செல்கிறான்.உதய தீப் அருகில் இருந்து உடலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது தூங்கி விட அப்போது பிணம் திடீரென காணாமல் போகிறது.உதய தீப்பை அனைவரும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க இந்த மர்மத்தை விசாரிக்க இன்ஸ்பெக்டர் ஆதேஷ் பாலா களமிறங்க, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.இதனிடையே உதய தீப்பின் மற்றொரு மாமனும் மர்மமான முறையில் இறக்கிறார். இந்த இருவரின் தொடர் மரணங்கள் பின்னணி என்ன இன்ஸ்பெக்டர் ஆதேஷ் பாலாவால் காணாமல் போன பிணத்தை கண்டுபிடிக்க முடிந்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.
உதய தீப் தனது கதாபாத்திரத்தை நகைச்சுவை கலந்த நடிப்புடன் நேர்த்தியாக நகர்த்தி நடித்துள்ளார்.
மற்றும் ஆதேஷ் பாலா,யாசர்,மாஸ்டர் அஜய்,கவிதா சுரேஷ்,பிரேம் கே.சேஷாத்ரி என அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் சரண் ராகவன்,வி.ஜே.ரகுராம் இசையும், ஒளிப்பதிவாளர் பூபதி வெங்கடாச்சலம் ஒளிப்பதிவும் கதைக்கு பலம்.
சஸ்பென்ஸ் திரில்லர் திரைக்கதையை காமெடி கலந்து இன்றைய இளம் தலைமுறைக்கு ஏற்றவாறு சொல்லி இருக்கும் இயக்குனர் ஆண்டன் அஜித்துக்கு பாராட்டுகள்.

சாவீ ஜாலி.