kollywood news

தி கிராண்ட் மாஸ்டர்  விமர்சனம்

அபர்ணதி பிறப்பின் அடிப்படை சார்ந்த ஒதுக்குதல்கள்,பணப்பற்றாக்குறை மற்றும் சமூகத்தின் கெடுபிடிகள் எனப் பலமுனைத் தாக்குதல்களைத் தினமும் சந்தித்தபோதிலும் தனது மகனை பொதுவெளியின் முதன்மை ஆளாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் நீங்காத நினைவாக அபர்ணதியின் நெஞ்சில் இருந்துகொண்டே இருக்கிறது. அவருக்குத் துணையாகவும், குடும்பத்தின் தூணாகவும் நின்று ஆதரவளிக்கும் கணவராக லிங்கேஷ் இருக்கின்றார். அதிகார வர்க்கத்தின் எதிர்ப்புகளை முறியடிக்க அபர்ணதியும் கணவர் லிங்கேஷும் முடிவுகளை எடுக்கிறார்கள். ஆனால் சாதிய வர்க்க தீயால் லிங்கேஷ் கொல்லப்படுகிறார்.இந்த நிலையில்
தனது மகன் அஸ்வினுக்கு சதுரங்க ஆட்டத்தின் மீது இயல்பாகவே பேரார்வம் இருக்கிறது.எனினும்,அந்த விளையாட்டின் நுட்பங்களைக் கற்றுத்தேரவும், அங்கீகரிக்கப்பட்ட போட்டிக் களங்களில் தடம் பதிக்கவும் தொடர்ச்சியான முட்டுக்கட்டைகள் குறுக்கே நிற்கின்றன. வசதி படைத்தோரின் அதிகார வர்க்கத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாக வரும் சுரேஷ் மேனன் தனது ஆதிக்கப் பின்னணியாலும் மறைமுகச் சதிகளாலும் அந்த எளிய சிறுவனின் முன்னேற்றத்திற்கு அடுக்கடுக்கான தடைகளை ஏற்படுத்துகிறார்.வறுமையின் பிடியையும் சுரேஷ் மேனனின் அதிகார அடக்குமுறைகளையும் எதிர்கொள்ளும் தாய் அபர்ணதி, அதிகாரம் என்பது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்துவதற்கே அன்றி தனிமனித தாக்குதலாக மாறக்கூடாது என்ற தன் தார்மீகக் கோட்பாட்டோடு உறுதியாக நிற்கிறார். செஸ் பலகையில் எதிராளியை வீழ்த்த உத்திகளை வகுப்பது போலவே நிஜ வாழ்வின் சமூகத் தடைக் கற்களையும் அதிகார வர்க்கத்தின் எதிர்ப்புகளையும் முறியடிக்க தாய் அபர்ணதி விவேகமான முடிவுகளை எடுத்து தன் மகனை உலக சதுரங்கத்தின் உயரிய ‘கிராண்ட் மாஸ்டர்’ சிம்மாசனத்தில் அமர்த்த எடுக்கும் போராட்டமே மீதிக்கதை.
அபர்ணதி தாயாக கனமான கதாபாத்திரத்தில் தனது உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார்.
மற்றும் லிங்கேஷ்​,வெற்றிச்செழியன், சுரேஷ் மேனன்,அஸ்வின்,தமிழரசி,அன்பு என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
தினேஷ் ஆண்டனி இசையும்,அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகர் ஆர்.எஸ்.இருவரின் ஒளிப்பதிவும் கதைக்கு பலம்.
ஒரு சமூகப் பொறுப்புள்ள கருத்தை கையில் எடுத்து சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து பார்வையாளர்களின் உணர்வுகளைத் தொடும் வகையில் இயக்கி இருக்கும் இயக்குனர் வெற்றிச்செழியன் அவர்களுக்கு பாராட்டுகள்.
தி கிராண்ட் மாஸ்டர் உணர்வுபூர்வமான லட்சிய படைப்பு.

Get real time updates directly on you device, subscribe now.