kollywood news

“சர்தார் 2″விமர்சனம்

நாயகன் கார்த்திக்,தந்தையும் மகனுமாக இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்திருக்கும் படம்“சர்தார் 2”.4 ஆண்டுகளுக்குமுன் வெளிவந்து வெற்றிபெற்ற சர்தார் படத்தின் 2ஆம் பாகம்தான் “சர்தார் 2”. இதில் சீனா நாடு வியாதிக் கிருமிகளை உருவாக்கி அதை இரும்புக் குடுவைக்குள் வைத்து பல நாடுகளுக்கு அனுப்புகிறது.அதில் இரண்டு குடுவைகள் இந்தியாவில் விழுந்துவிடுகிறது.அந்த குடுவைகளை கைப்பற்றி வெடிக்க வைத்து நாட்டை அழிக்க எஸ்.ஜே.சூர்யா திட்டமிடுகிறார். அந்த திட்டத்தை முறியடிக்க இந்திய ரகசிய உளத்துறை அதிகாரிகளான தந்தையும் மகனுமாக நடித்திருக்கும் கார்த்தி களமிறங்குகிறார்கள்.எஸ்.ஜே.சூர்யாவின் திட்டத்தை கார்த்தி முறியடித்தார்களா இல்கையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கார்த்தி.தந்தை மகன் என்ற இரு கதாபாத்திரங்களில் கலக்கி சண்டைக் காட்சிகளில் தூள் பறத்தி அவரின் ரசிகர்களுஜ்கு விருந்து படைத்திருக்கிறார்.
மற்றும் எஸ்.ஜே.சூர்யா,மாளவிகா மோகனன்,ஆஷிகா,யோகிபாபு,நிழல்கள் ரவி,ரஜிஷா விஜயன் ஆகியோர் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவும்,இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையும் கதைக்கு பலம்.
ஊசி போட்டு வளர்க்கும் பிராய்லர் கோழிக்கறியை சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை கதைக்களமாக கையில் எடுத்து சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் பி.எஸ்.மித்திரனின் சமுதாய சிந்தனைக்கு பாராட்டுகள்.
“சர்தார் 2” சிறப்பு.

Get real time updates directly on you device, subscribe now.