kollywood news

சட்டமும் நீதியும் 2 விமர்சனம்:

‘சட்டமும் நீதியும் 2’ஆறு எபிசோடுகளாக திரையிடப்படுகிறது.கதையின் ஆரம்பத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் துப்பாக்கியால் சுடப்பட்டு பரிதாபமாக உயிரிழக்கிறார் அவரது அதிர்ச்சி தரும் மரணத்தைக் கொலை வழக்காக பதிவு செய்கிறது காவல்துறை தீவிர விசாரணைக்குப் பின் அதிரடியாக நான்கு போலீஸ்காரர்களான கவிதா பாரதி,ஆறு பாலா,கல்லூரி வினோத்,பீட்டர் ஜே. சந்திரன் கைது செய்து சிறையில் அடைக்கிறது. ஆனால் கைது செய்யப்பட்டுள்ள அந்த நான்கு போலீஸ்காரர்களும் முற்றிலும் நிரபராதிகள்​, அப்பாவிகள்,அவர்களுக்கும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறி அவர்களது குடும்பத்தினர் கதறி அழுது முறையிடுகிறார்கள்.மற்றொருபுறம், கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பிரேமின் மனைவியும் பார் கவுன்சில் தலைவருமான வரலட்சுமி சரத்குமார் மிகப்பெரிய வாதத் திறமை படைத்த கம்பீரமான வழக்கறிஞராக வலம் வருகிறார் தன் கணவனின் கொலைக்கு காரணமான அந்த நான்கு பேரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதில் அவர் தீவிர உறுதி பூண்டுள்ளார் வரலட்சுமியின் செல்வாக்கு, அதிகார பலம் மற்றும் அஞ்சத்தக்க வாதத்திறமை காரணமாக அவருக்கு எதிராக கைது செய்யப்பட்ட நான்கு போலீஸ்காரர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கு நடத்த எந்த ஒரு வழக்கறிஞரும் முன்வர மறுக்கிறார்கள் சட்ட அமைப்பு குற்றஞ்சாட்டப்பட்டவர் களுக்கு எதிராக நிற்கும் இந்த நெருக்கடியான சூழலில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதி என்ற தர்மத்தின்படி, எளிய வழக்கறிஞர் சரவணன் அந்த நான்கு போலீஸ்காரர்களுக்காக துணிச்சலாக வாதாட முன்வருகிறார்.சக்திவாய்ந்த வரலட்சுமிக்கு எதிராக நீதிமன்றத்தில் நேருக்கு நேர் மோதும் சரவணன், தனது அனுபவம் மற்றும் நுட்பமான ஆதாரங்கள் மூலம் எதிர் தரப்பு வாதங்களை அடியோடு தகர்த்து தடுமாற வைக்கிறார்.இவர்களுக்கு இடையே நடக்கும் இந்தச் சட்டப் போராட்டத்தில் வென்றது யார் உண்மையான கொலையாளி யார் காவல்துறை சிறை பிடித்தவர்கள் குற்றவாளிகளா அல்லது நிரபராதிகளா சட்டப் போராட்டத்தில் நேர்மையான சரவணன் வென்றாரா என்பதே மீதிக்கதை.
மூத்த வழக்கறிஞராக திரையில் தோன்றும் பருத்திவீரன் சரவணன் ஆர்ப்பாட்டமில்லாத எளிய உடல்மொழி மற்றும் யதார்த்தமான பாவனைகளால் பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறார்.
வரலட்சுமி சரத்குமார் கணவனை இழந்த சோகம் ஒரு புறம்,குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தர வேண்டும் என்ற வைராக்கியம் ஒரு புறம் இருவேறு முகபாவனைகளை காட்டி அசாத்தியுள்ளார்.
மற்றும் லாவண்யா,பிரேம்குமார்,கல்லூரி வினோத்,கவிதா பாரதி,ஆறு பாலா,பீட்டர் ஜே.சந்திரன்,ஷிவின்,பருல் சம்பரியா, பவன்,அக்ஷயா வி,பிரியங்கா ரோபோசங்கர்,அபர்ணா சுந்தர்ராமன் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
விபின் பாஸ்கர் இசையும்,ஒளிப்பதிவாளர் எஸ்.கோகுலகிருஷ்ணன் ஒளிப்பதிவும் கதைக்கு பலம்.
வழக்கமான சினிமாத்தனமான பார்முலாக்கள் அனைத்தையும் தவிர்த்து,பார்வையாளர்களை சீட் நுனியில் அமர வைக்கும் சிறந்த திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் பாலாஜி செல்வராஜ் அவர்களுக்கு பாராட்டுகள்.
சட்டமும் நீதியும் 2 சிறந்த சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லர்.

Get real time updates directly on you device, subscribe now.