நாயகன் சூர்யா காவல் துறையில் உயர் அதிகாரியாக ஆர்வமில்லாமல் பணிபுரிந்து வருகிறார்.இதனால் சக காவலர்களிடமும் மேலதிகாரியான லால் உட்பட ஒருவரையும் மதிக்காமல் எரிச்சலூட்டும் வகையில் கண்டிப்புடன் நடந்து கொள்கிறார்.கொலை வழக்குகளை விசாரிப்பதில் சூர்யா திறமையானவர் என்பதால் அனைவரும் அவரை மரியாதையாக பார்க்கின்றனர்.இந்நிலையில் சூர்யா செய்யும் வேலையில் விருப்பமில்லாமல் லாலிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தும் அதனை ஏற்க மறுக்கிறார் லால்.இதற்கிடையில் நகரத்தை அதிர வைக்குமளவில் சைகோத்தனமான பர்ஃப்யூம் வாசத்துடன் தொடர் கொலைச் சம்பவங்கள் கொடூரமாக நடக்கிறது.ஏற்கனவே சூர்யா கைது செய்த கொலையாளியான டோவினோ தாமஸ் பாணியில் தொடர் கொலைகள் நடைபெறும் நிலையில் சிறையில் இருக்கும் அவரை விசாரிக்க செல்கிறார் சூர்யா.மற்றொரு பக்கம் நஸ்லென் பணத்திற்காக சாமர்த்தியமான திட்டத்துடன் தன் குழுவோடு கொலைகளை செய்து சந்தோஷமாக இருக்கிறார்.
நடக்கும் கொலைகளில் ஒருவிதமான மர்மம் இருப்பதை கண்டுபிடிக்கும் சூர்யா தன் குழுவுடன் கொலையாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார்.
இறுதியில் உயர் அதிகாரியான சூர்யா தீவிர விசாரணையில் உண்மையான கொலை குற்றவாளி யார் என்பதை கண்டுபிடித்தாரா
வழக்குகளை விசாரிப்பதில் திறமையான சூர்யா மேலதிகாரியிடம் ராஜினாமா கடிதம் கொடுப்பதற்கான காரணம் என்ன என்பதே படத்தின் மீதிக் கதை.
இன்பராஜ் கதாபாத்திரத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் சூர்யா இதுவரை ஏற்காத வேடத்தில் வித்தியாசமான உடல் மொழியில் அசத்தலான ஆக்க்ஷனுடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மாயா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நஸ்ரியா நஜீம் இயல்பான நடிப்பில் ஆக்க்ஷனுடன் சேர்ந்து உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
அமைதியான வில்லனாக நஸ்லென் தனது நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார்.
மற்றும் லால்,ஆனந்தராஜ்,டோவினோ தாமஸ்,ராஜ் பிரியன் உட்பட அனைத்து நடிகர்களும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமின் இசையும்,ஒளிப்பதிவாளர் வினீத் அகஸ்டியனின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.
ஒரு வித்தியாசமான கதையை கையில் எடுத்து அதற்கு விறு விறுப்பான திரைக்கதை அமைத்து நேர்த்தியான எதிர்பாராத திருப்பங்களுடன் வித்தியாசமான முறையில் சிறந்த படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஜித்து மாதவன் அவருக்கு பாராட்டுகள்.
‘சீன்’சீனான மிரட்டலான அனைத்து தரப்பினரும் ரசிக்கக்கூடிய கிரைம் திரில்லர்.
Get real time updates directly on you device, subscribe now.