தொழிலதிபரான சத்யராஜின் ஒரே மகள் ஐஸ்வர்யா அர்ஜுன்.சிறுவயதிலேயே தாயை இழந்த ஐஸ்வர்யா தந்தைதான் தனது உலகம் என்று வாழ்ந்து வருகிறார்.தனது மகளுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று விரும்புகிறார் தந்தை.ஐஸ்வர்யா இதற்கு சம்மதம் தெரிவிக்காமல் ஒரு சிறந்த செஃப் ஆக வர விரும்புகிறார்,மதுரையில் நடக்கும் ஒரு முக்கியமான செஃப் கருத்தரங்கில் கலந்து கொள்ள தனது காரிலேயே பயணிக்கிறார். வழியில் நிர்ஞ்சன் என்ற இளைஞனுக்கு லிஃப்ட் கொடுக்க நேரிடுகிறது.பயணத்தின் போது ஒரு சாலையோர உணவு கடையை நடத்தும் ஒரு குடும்பம்,ஒரு தாதா,ஒரு பழ வியாபாரி,ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் எனப் பல மனிதர்களின் குறுக்கீடுகளால் ஐஸ்வர்யாவின் பயணம் எதிர்பாராத விதமாகத் தாமதமாகிறது.இளைஞன் நிர்ஞ்சனையும் அவருடைய கிராமமான சீதாபுரத்தில் இறக்கி விட்டு விட்டு செல்கிறார்.இறுதியில் அவர் மதுரை ஹோட்டலை அடையும் போது,அங்கே ஒரு பயங்கரமான கேஸ் விபத்து ஏற்பட்டு அந்த இடமே வெடித்துச் சிதறி இருக்கிறது. ஒருவேளை ஐஸ்வர்யா குறித்த நேரத்திற்குச் சென்றிருந்தால் அந்த விபத்தில் உயிர் இழந்திருப்பார்.தன்னைத் தாமதப்படுத்திய அந்த ஒவ்வொரு மனிதரும் மறைமுகமாகத் தன் உயிரைக் காப்பாற்றியவர்கள் என்பதை உணரும் ஐஸ்வர்யா நன்றியுணர்வுடன் அவர்கள் ஒவ்வொருவரையும் மீண்டும் தேடிச் செல்லும் பயணமே படத்தின் மீதிக்கதை.
ஐஸ்வர்யா அர்ஜுன் வலுவான கதாபாத்திரத்தை ஏற்று மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நிர்ஞ்சன் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்.
மற்றும் அர்ஜுன் சிறப்பு தோற்றத்திலும்,துருவா சர்ஜா,பிரகாஷ் ராஜ்,சத்ய ராஜ்,கோவை சரளா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
அனூப்ரூபென்ஸ் இசையும்,ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவும் கதைக்கு பெரிய பக்கபலம்.
நன்றியுணர்வு என்ற ஒரு அழகான கருவை மையமாக வைத்து சிறந்த திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் அவர்களுக்கு பாராட்டுகள்.
சீதா பயணம் உணர்வுகள் நிறைந்த சிறப்பான பயணம்.
