“மை லார்ட்” விமர்சனம்

கதையில் மத்திய அமைச்சரான ஆஷா சரத்துக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி உயிருக்கு போராடும் நிலை ஏற்படுகிறது. இதனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார்.வெளி உலகத்திற்கு தான் ஆரோக்கியமாக இருப்பதாக காட்டிக் கொண்டு அறுவை சிகிச்சையை ரகசியமாக செய்து முடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.அதே சமயம் அவரது இரத்தப் பிரிவு அரிதானது என்பதால் அவருக்கான மாற்று சிறுநீரகம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.அவருக்கான மாற்று சிறுநீரகத்தை தேட அதற்கு பொறுத்தமானவராக சசிகுமார் இருப்பார் என்று முடிவு செய்கிறார்கள்.சசிகுமாரை தேர்வு செய்யும் அமைச்சர் தரப்பு அவரை அவரது ஊரில் இருந்து ரகசியமாக சென்னைக்கு அழைத்து வர முயற்சிக்கிறது.அவர்களது வழியில் சென்று இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அரசு இயந்திரத்திற்கும்,அதிகார வர்க்கத்திற்கும் சாமானியனான சசிகுமார் என்ன முடிவு எடுத்தார்,அவருக்கு நடந்தது என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
சசிகுமார் தனது கதாபாத்திரத்தின் தாக்கத்தை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து சிறப்பாக நடித்துள்ளார்.
சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் சைத்ரா ஜே.ஆச்சார் தனது இயல்பான நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து விடுகிறார்.
மற்றும் ஆஷா சரத்,குரு சோமசுந்தரம், ஜெயப்பிரகாஷ்,கோபி நயினார்,வசுமித்ரா ஆகியோர் சிறந்த முறையில் நடித்து ஸ்கோர் செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும்,ஷான் ரோல்டனின் இசையும் கதைக்கு கூடுதல் பலம்.
எளியவர்களின் வாழ்வின் மூலம் அதிகார வர்க்கத்தினருக்கும்,அரசுக்கும் ஏற்படும் முரண்பாடுகளைசிறந்த திரைககதையாக அமைத்து இயக்கியிருக்கும் இயக்குனர் ராஜுமுருகன் அவர்களுக்கு பாராட்டுகள். ‘மை லார்ட்’அதிகார வர்க்கத்திற்கு சாமானியர்கள் எழுதும் தீர்ப்பு.