சக்தித் திருமகன் விமர்சனம்

கதையின் நாயகன் விஜய் ஆண்டனியை குழந்தையாக ஒரு குப்பை குடவுனில் இருந்து எடுத்து வளர்கிறார் வாகை சந்திரசேகர்.வளர்ந்து பெரியவனாகி தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் இடைத்தரகு பணியை மேற்கொள்கிறார். அமைச்சர்கள், அரசின் உயர் அதிகாரிகள், அரசு திட்டங்கள், அரசு அதிகாரிகள் முதல் அரசு அலுவலகங்களில் இருக்கும் அடித்தட்டு ஊழியர்கள் வரை, ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பையும் பக்காவா தெரிந்து வைத்துக் கொண்டு, அரசு அதிகாரிகள் உட்பட அடித்தட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை கமிஷனாக ஒரு கட்டணம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை கச்சிதமாக செய்து கொடுக்கிறார். அதே நேரத்தில் வாழ்வாதாரத்திற்காக அரசை அணுகும் ஏழை எளிய மக்களுக்கு பணம் வாங்காமல் உதவியும் செய்கிறார்.சுனில் கிர்பலானி பிரபல தொழிலதிபராகவும், தமிழகத்திலிருந்து டெல்லி வரை அரசியல் ஆலோசகராகவும் இருக்கும் அரசியல் சாணக்கியர் அவரது இல்லத்தில் விஜய்ஆண்டனி சின்ன சின்ன வேலைகளையும் அவ்வப்போது செய்கிறார். இந்நிலையில் டெல்லியில் அதிகாரமும், அரசியல் பலமும் கொண்ட பெண் அமைச்சர் ஒருவரின் உறவினர் ஜப்பான் நிறுவனம் ஒன்று தமிழகத்தில் தொழில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்காக அமைச்சரின் பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு எப்படியாவது மாற்றி தரும்படி கேட்டு அதற்கான கமிஷன் பணம் 200 கோடி ரூபாய்​ தருவதாக கிட்டுவிடம்கூறுகிறார். கிட்டு இந்த காரியத்தை தனது துரிதமான செயல்திறனால் வெற்றிகரமாக செயல்​ படுத்தி முடிக்கிறார். ஆனால் இதில் மறைமுகமாக பாதிக்கப்படுகிறார் சுனில் கிர்பலானி .விரைவில் விஜய் ஆண்டனி ஒரு பெரிய சிக்கலில் சிக்குகிறார். பாதிக்கப்பட்ட தொழில் அதிபர் சுனில் கிர்பலானி ஒட்டுமொத்த அரசியலும் அதன் பின்னணியில் விஜய் ஆண்டனி இருப்பதை கண்டுபிடித்து 6,000 கோடிக்கு மேல் மோசடி செய்த அவரை வேட்டையாட களமிறங்குகிறார்கள். இந்த சிக்கலிலிருந்து விஜய் ஆண்டனி மீண்டாரா அவரின் பின்னணி என்ன தரகர் வேலைகளை எதற்கு செய்கிறார் தொழில் அதிபர் சுனில் கிர்பலானி அடுத்த அரசியல் திட்டம் என்ன அதில் அவர் வெற்றி பெற்றாரா இதுவே படத்தின் மீதிக்கதை.விஜய் ஆண்டனி
கிட்டு கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி,அவர் தனது தனித்துவமான உடல்மொழியுடன் ஒரு அமைதியான மனிதனாக அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மற்றும் சுனில் கிர்பலானி,வாகை சந்திரசேகர்,த்ருப்தி ரவீந்திரன்,செல் முருகன்,கிரண் குமார்,ஷோபா விஸ்வநாத், ரினி,ரியா ஜித்து,மாஸ்டர் கேசவ் ஆகியோர் அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.
ஷெல்லி ஆர். காலிஸ்ட் ஒளிப்பதிவும், விஜய் ஆண்டனி இசையும் படத்திற்கு பலம்.
இந்த காலத்துக்கு ஏற்றது போல பரபரப்பான திரைக்கதை அமைத்து சில சுவாரஸ்ய ட்விஸ்ட் களுடன் சொல்லி இருக்கும் இயக்குனர் அருண் பிரபு அவர்களுக்கு பாராட்டுகள்.
சக்தித் திருமகன் மிகவும் சக்திவாய்ந்த திருமகன்.