சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படம் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனான எழுத்தாளர் துஷார் காந்தியிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது!
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அழுத்தமான சம்பவங்களை வரலாற்றுப் பின்னணியுடன் இயக்குநர் நிகில் அத்வானி உருவாக்கி இருக்கும் ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படம் ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு பெற்று வருகிறது.
குறிப்பிடத்தக்க பாராட்டு மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தியிடமிருந்து கிடைத்துள்ளது. இது பற்றி அவர் தனது எக்ஸ் தளத்தில், “சோனி லைவ் ஓடிடி தளத்தில் ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படம் பார்க்க ஆரம்பித்தேன். பாபு, பண்டிட் நேரு மற்றும் இந்துத்துவா பற்றிதான் கதை இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், நான் நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று பின்னர் உணர்ந்தேன். ஒரு விஷயத்தில் முன்கூட்டிய முடிவு இல்லாமல் இருக்க வேண்டும். நிச்சயம் நீங்கள் எல்லோரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
துஷார் காந்தியைத் தவிர, சிந்தனையைத் தூண்டும் தனது படங்களுக்கு புகழ்பெற்றவரும் இயக்குநர் நிகிலின் வழிகாட்டியுமான இயக்குநர் சுதிர் மிஸ்ரா, இந்தப் படத்திற்காக நிகிலின் கடுமையான உழைப்பைப் பாராட்டியுள்ளார்.
லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லேபியர் ஆகியோரின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்தில்
சித்தாந்த் குப்தா, சிராக் வோஹ்ரா, ராஜேந்திர சாவ்லா, ஆரிஃப் ஜகாரியா, மலிஷ்கா மென்டோன்சா, ராஜேஷ் குமார், கே.சி. ஷங்கர், லூக் மெக்கிப்னி, கார்டெல் புஜேஜா, அலிஸ்டர் ஃபின்லே, ஆண்ட்ரூ கல்லம் மற்றும் ரிச்சர்ட் டெவர்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்டுடியோ நெக்ஸ்டுடன் இணைந்து எம்மே என்டர்டெயின்மென்ட் (மோனிஷா அத்வானி & மது போஜ்வானி) ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். ’ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் மட்டும் பாருங்கள்.