நடிகனாக வேண்டும் என்கிற கனவுடன் போராடும் ஒருவனது வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான கதை தான் ஸ்டார்.
தமிழ் திரையுல சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்று ஆசைப்படும் கவினின் தந்தையான லால் அதில் சாதிக்க முடியாமல் போக புகைப்பட கலைஞர் ஆகிறார்.
இதனால் பள்ளியில் படிக்கும் காலம் முதல் கவினுக்கு நடிப்பில் ஆர்வத்தை உண்டாக்கி இளைஞரான பின் கவின் நடிப்பதற்கான முயற்சிகளுக்கு அவருக்கு பக்க துணையாக இருந்து செயல் படுகிறார்.
ஒரு பக்கம் கவின் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி தீவிரமாக அலைந்து திரிந்து முயற்சி செய்கிறார்.மற்றொரு பக்கம் நாயகி ப்ரீத்தி முகுந்தன் கவின் இருவரும்
காதலிக்கின்றனர்.பிரபல இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க வாய்ப்பு வரும் நிலையில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கும் கவினுக்கு முகத்தில் தழும்புகள் போன்ற காயங்கள் ஏற்படுகிறது.
இந்த நிலைமையில் காதலியான ப்ரீத்தி முகுந்தனும் சில காரணங்களால் கவினை விட்டு பிரிந்து செல்கிறார்.
விபத்தில் ஏற்பட்ட காயத்தினால் மனமுடைந்த கவின் ஒரு பக்கம் காதலி தன்னை விட்டு பிரிந்த கவலை இந்த நிலையில் இறுதியில் நடிகராக வெற்றி பெற்றாரா இல்லையா காதலியோடு சேர்ந்தாரா என்பதே ஸ்டார் படத்தின் மீதிக் கதை.
நாயகன் கவின் தனது உணர்வுப்பூர்வமான நடிப்பை மிக சிறப்பான முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.
படத்தின் இரு நாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் ஆதித்தி பொஹங்கர் இருவரும் அவர்களது இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளனர்.
கவினின் தந்தையாக நடித்திருக்கும் லால், அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், மற்றும் மாறன்,காதல் சுகுமார்,நிவேதிதா ராஜப்பன்,தீப்ஸ்,ராஜாராணி பாண்டியன், சஞ்சய் ஸ்வரூப்,தீரஜ் என நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பணியினை சிறப்பாக செய்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவாளர் எழில் அரசின் ஒளிப்பதிவும்,படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ் அவர்களின் படத்தொகுப்பும் படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளது.
யாரும் எதிர்பார்க்காத முடிவுடன் அனைவரும் பாராட்டும் விதமாக படத்தை இயக்கியுள்ள இயக்குனர் இளனை நாமும் பாராட்டியாக வேண்டும்.
மொத்தத்தில் ஸ்டார் சூப்பர் ஸ்டார்.
