கதைப்படி கதையின் நாயகன் சிவா ஒரு அசல் கடத்தல்காரர் அமைச்சராக வரும் கருணாகரன் அரசியலில் என்ட்ரி கொடுத்து பின்பு நிதி அமைச்சராக மக்களால் 3 முறை தேர்வு செய்யப்படுகிறார்.இவர் ஊழல் செய்து ஒரு கட்டத்தில் மாட்டிக்கொள்கிறார். இந்நிலையில்,தனது தந்தை எம்.எஸ்.பாஸ்கரின் கோபத்துக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் தனது கட்சியின் வெற்றிக்காக ‘கேம் ஆப்’ மூலமாக மக்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை அள்ளலாம் ஒரு புதுமையான யோசனையை முன்வைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்.இப்படி இருக்க நிலையில் பல ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஆளுங்கட்சி நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான வாகை சந்திரசேகருக்கு திடீரென நினைவு திரும்புகிறது. ஊழல்வாதியான ராதாரவி முதல்வராக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். கோபம் அடந்த வாகை சந்திரசேகர் ராதாரவிக்கு எதிராகக் கட்சி ஆரம்பிக்கிறார்.
இந்நிலையில் ஏற்கனவே செய்த குற்றத்திற்காக சிறை சென்ற சிவா 2024 இல் சிறையிலிருந்து திரும்பியதும்,தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மீண்டும் தொழிலை தொடங்குகிறார்.
நிதியமைச்சர் அமைச்சர் கருணாகரனை சிவாவும் அவரது கூட்டாளிகளும் கடத்துகின்றனர்.அதன்பிறகு பழிவாங்க துடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரி யோக் ஜேபி மற்றும் மூன்று குண்டர்களுடன் நடக்கும் பரபரப்புடன் கூடியது தான் படத்தின் மீதிக்கதை.
சிவாவின் வழக்கமான வேடிக்கையான நகைச்சுவையை தனது கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தி உற்சாகப்படுத்த முயற்சிக்கிறார் ஆனால் ஏனோ தடுமாறுகிறார்.
மற்றும் ராதாரவி,எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன்,வாகை சந்திரசேகர்,ஹரிஷா ஜஸ்டின்,அருள்தாஸ்,யோக் ஜேபி,கவி, கல்கி,கராத்தே கார்த்தி உட்பட அனைத்து நடிகர்களின் பங்களிப்பும் சிறப்பு.
எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசை மற்றும் ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசை கதைக்கு ஓரளவு பலம்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே.தில்லையின் ஒளிப்பதிவு எதார்த்தம்.
எடிட்டர் இக்னேஷியஸ் அஷ்வின் எடிட்டிங் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.
அரசியல் நையாண்டி, மற்றவர்களின் கண்ணுக்குத் தெரியாத கற்பனை இவைகளை காமெடியாக வடிவமைத்து சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து வழங்கிய இயக்குனர் எஸ்.ஜெ.அர்ஜுன் அவர்களுக்கு பாராட்டுகள் இன்னும் திரைக்கதையில் சற்று கவனமாக செயல் பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் சூது கவ்வும் 2 அனைவரும் ஒரு முறை பார்க்கும் காமெடி படம்.
