தாய் கிழவி விமர்சனம்

கிராமத்தில் 70 வயது மூதாட்டி ராதிகா சரத்குமார் வட்டித் தொழில் செய்து வருகிறார்.ஊரே அஞ்சும் அளவுக்கு முரட்டுத்தனம் மற்றும் மிகவும் கறாரானவர், யாரிடமும் அஞ்சாதவர்.இவருக்கு ஒரு மகள் ராய்ச்சல் ரபேக்கா மற்றும் அருள்தாஸ்,சிங்கம்புலி,பால சரவணன் என மூன்று ஊதாரி மகன்கள் உள்ளனர். மூவருமே சொத்துக்காகவும் பணத்துக்காகவும் அலைபவர்கள்.இதனால் கடுப்பான ராதிகா அவர்களை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்.சொத்துக்காகவும், பணத்திற்காகவும் அலைந்து திரியும் இவர்களுக்கும் தாய்க்கும் இடையே பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லை. முத்துக்குமார் தனக்கு கொடுக்க வேண்டிய வரதட்சணையில் மீதமுள்ள 3 சவரன் நகைக்காக ராதிகாவிடம் சண்டை போடுகிறார். கோபம் அடைந்த ராதிகா எதற்கும் உதவாத மருமகனை விரட்டிவிட்டு, தனது மகள் மற்றும் பேரனை தன்னோடு வைத்துக்கொள்கிறார்.ஒவ்வொரு நாளும் ராதிகா வீட்டில் கருப்பனை நினைத்து தனது பிரார்த்தனைகளை முடித்துவிட்டு வீட்டை விட்டு வெளியே வரும்போது அங்குள்ள கிராமவாசிகளின் அலறியடித்து ஓடுவார்கள், ஏனென்றால் அவர் வருகையால் அங்கு என்ன நடக்கப் போகிறது என்பது அவர்களுக்குத் தெரியும் ராதிகா இரக்கமின்றி ஊர் முழுவதும் நடந்தே சென்று பல ஆண்டுகளாகக் கடன் கொடுத்த பணத்திற்காக வட்டி வசூலிப்பார்.ஒரு நாள் திடீரென ராதிகாவின் உடல்நிலை சரியில்லாமல் மயக்கமடைந்து கோமா நிலைக்குச் செல்கிறார்.தனது கிராமத்திற்கு ஒரு சிம்ம சொப்பனமாக இருக்கும் ராதிகா மரணப்படுக்கையில் இருக்கும் போது அவரது சொத்துக்களை வாங்குவதற்கு அவரது மகன்கள், மருமகன் மற்றும் கிராம மக்கள் உட்பட அனைவரும் அவர் இறக்க விரும்புகிறார்கள். அதே நேரத்தில் எல்லா இடங்களிலும் அவரது மரணத்திற்கு பிரார்த்தனைகளும்,கொண்டாட்டங்களும் நடைபெறுகிறது.அவர் இறந்தால் சொத்து கிடைக்கும் என எதிர்பார்த்து ஓடி வரும் மகன்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது.ராதிகா ரகசியமாக சேர்த்து வைத்திருக்கும் 160 சவரன் நகை எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. இந்த விஷயம் அறிந்ததும் அவரது மகன்கள் மருமகனுக்கு தெரியாமல் அவரை மரணத்தின் விளிம்பில் இருந்து மீட்டெடுக்க தீவிர முயற்சிகளை தொடங்குகிறார்கள். இந்த முயற்சியில்,ஒவ்வொரு வகையான வீண் விரையங்களும்,விரிவான சில அறிமுகங்களையும் பெறுகிறார்கள் அவர் ஒரு நிமிடம் கண் விழித்து அதை சொன்னால் மட்டுமே அவர்களுக்கு அந்த நகை கிடைக்கும்.அதுவரை அவரை உயிரோடு வைத்திருக்க மகன்கள் எடுக்கும் வினோதமான முயற்சிகளும் அதில் ஏற்படும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான திருப்பங்களுமே படத்தின் மீதிக்கதை.
70 வயது மூதாட்டியாக பவுனுத்தாயாக ராதிகா சரத்குமார் மிகத் தத்ரூபமாக வாழ்ந்து காட்டியுள்ளார்.
மற்றும் சிங்கம்புலி,அருள்தாஸ்,முனிஷ்காந்த்,பால சரவணன்,இளவரசு,முத்துக்குமார்,ஜார்ஜ் மரியன்,ரைச்சல் ரபேக்கா,முத்துலட்சுமி, நிரோஷா,அபிநயா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையும்,ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமாரின் ஒளிப்பதிவும் கதைக்கு பலம்.
நகைச்சுவை நிறைந்த கதையில் சிறந்த திரைக்கதை அமைத்து உணர்ச்சிகள் மற்றும் நகைச்சுவைக்கு சரியான அளவு முக்கியத்துவம் கொடுத்து சிறந்த முறையில் இயக்கி இருக்கும் இயக்குனர் சிவகுமார் முருகேசனுக்கு பாராட்டுகள்.
தாய் கிழவி அனைவரும் சிரிக்கவும்,சிந்திக்கவும்.