சமுத்திரக்கனி பைத்தியக்காரன்’ என்று முத்திரை குத்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பணியிலிருந்து விலக நினைக்கும் நேரத்தில்
ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் நடந்த கொடூரமான தொடர் நள்ளிரவு இரட்டை கொலைகளை பற்றிய மர்மமான வழக்கை விசாரிக்கிறார்.இந்நிலையில்,இந்த காவல் நிலையத்திற்கு புதிதாக மாற்றலாகி வரும் இன்ஸ்பெக்டர் ஷிவதா தலைமையில் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரகனியின் செயல்கள் இன்ஸ்பெக்டர் ஷிவதாவுக்கு கொஞ்சம் வருத்தத்தை தருகிறது.பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரகனியின் திறமையை பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட அவர் அவருக்கு ஆதரவாக நிற்கிறார். சுமார் 72 கொலைகள் இதே பாணியில் நடந்திருப்பதை சமுத்திரக்கனி கண்டுபிடிக்கிறார்.இது ஒரு தனி மனிதனின் வெறிச்செயலா அல்லது ஒரு குழுவின் கூட்டுச் செயலா விசித்திரமான இந்த இரட்டைக் கொலை வழக்கில் உள்ள சம்பவங்களுக்குப் பின்னால் உள்ள விசித்திரமான மனநிலை என்ன சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரகனியும், இன்ஸ்பெக்டர் ஷிவதாவும் சவால்கள் நிறைந்த இந்த வழக்கை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே தொடரின் மீதிக்கதை.
சமுத்திரக்கனி முதிர்ச்சியான எஸ் ஐ அதியமான் கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பு வெளிப்படுத்தியுள்ளார்.
ஷிவதா புத்திசாலித்தனமான பெண் அதிகாரி இன்ஸ்பெக்டர் லட்சுமி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
மற்றும் ராஜ் திரன்தாஸ்,மூணார் ரமேஷ், சுந்தரபாண்டியன்,பிரேம்,கொற்றவை, விசாகன்,புலிப்பாண்டி மற்றும் பலர் சிறப்பாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் விபின் பாஸ்கரின் இசையும்,ஒளிப்பதிவாளர் கே.கே-வின் ஒளிப்பதிவும் தொடருக்கு கூடுதல் பலம்.
ஒரு உண்மைச் சம்பவத்தை கமர்ஷியல் சமரசங்கள் இன்றி சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து உணர்ச்சிகளுக்கும், புலனாய்வுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து சிறந்த முறையில் இயக்கியுள்ள இயக்குனர் நவின்குமார் பழனிவேலுக்கு பாராட்டுகள்.
‘தடயம்’ தடை இல்லாத புலனாய்வு தொடர்.
