தலைவன் தலைவி விமர்சனம்

கதையின் நாயகன் விஜய் சேதுபதி அசைவ ஹோட்டல் ஒன்றை சொந்தமாக நடத்திவருவதுடன் தந்தை சரவணன்,தாய் தீபா சங்கர் மற்றும் தங்கை ரோஷ்னி,தம்பி ரோஹனுடன் வாழ்ந்து வருகிறார்.அவருக்கு நன்கு படித்த பட்டதாரி பெண்ணான நித்யா மேனனை பெண் பார்க்கிறார்கள். பார்த்தவுடன் ஒருவர் மீது ஒருவருக்கு விருப்பம் உண்டாகிறது.இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள்.சில நாட்களில் விஜய் சேதுபதியின் தம்பி, மற்றும் தந்தை அனைவரும் ரவுடிகள் என தெரியவர, பெண் வீட்டில் இந்த திருமணத்தை நிறுத்த முடிவு செய்கின்றனர். அதே நேரத்தில் விஜய் சேதுபதியின் தாய் பெண்ணின் ஜாதகத்தை பார்க்கும் போது நித்யாமேனன் மருமகளாக வந்தாள் குடும்பத்தை பிரித்து விடுவாள் என்று சொல்ல விஜய் சேதுபதியின் தாய் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று முடிவு செய்கிறார். ஆனால் இவர்கள் இருவரும் இரு குடும்பத்தினர்கள் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொள்கிறார்கள். சந்தோஷமாக போகும் இவர்களது திருமண வாழ்க்கை,சில நாட்கள் கழித்து அவர்கள் இருவருக்குள் வாக்குவாதங்கள் மற்றும் சின்ன சின்ன சண்டைகள் நடக்கிறது.மீண்டும் சமாதானம் ஆகி இருவரும் குடும்பம் நடத்துகிறார்கள்.விஜய சேதுபதியின் தந்தை சரவணன் நித்யாமேனனை குடும்ப பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு ஹோட்டலின் கல்லாவில் உட்கார சொல்கிறார் அவர் உட்கார சொன்ன பிறகு வீட்டில் மாமியார் மற்றும் தங்கையால் தொடங்கும் ஈகோ பிரச்சினை ஏற்பட்டு,குடும்பத்தில் சலசலப்பு ஏற்படுகிறது.தாயும் சகோதரியும் தங்கள் வீட்டையும் உணவகத்தையும் வீட்டு மருமகள் வசம் போனதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் குடும்பத்தில் நடக்கும் சண்டையில் நித்யாமேனன் கோபித்துக் கொண்டு குழந்தை மகிழினியுடன் தாய் வீட்டிற்கு செல்கிறாள். இதை காரணமாக வைத்து இரண்டு குடும்பத்தாரும் இருவரையும் பிரித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். இருவரும் மூன்று மாதங்கள் பிரிந்துள்ள நிலையில் விஜயசேதுபதிக்கு தெரிவிக்காமல் அவர் மகள் மகிழினிக்கு குலதெய்வ கோவிலில் மொட்டை அடிக்க நித்யா மேனன் குடும்பம் கூடுகிறது. பாதி மொட்டை அடித்த நிலையில் விஷயம் அறிந்து விஜய்சேதுபதி குலதெய்வ கோயிலுக்கு வந்து தகராறு செய்கிறார். விஷயம் அறிந்து அவரது குடும்பத்தினர் அங்கு வந்து நித்யா மேனன் குடும்பத்தினருடன் சண்டை போடுகிறார்கள். கோவிலுக்கு வந்த சொந்த பந்தங்களும், மற்ற ஊர் மக்களும் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்கின்றனர், ஆனால் வாய்ச்சண்டை முற்றி மோதலில் முடிகிறது.அதன் பின் என்ன நடந்தது இருவரும் பிரிய யார் என்ன காரணம் இருவரும் சமாதானம் ஆகி பாதியில் நின்ற குழந்தையின் மொட்டை அடிக்கும் விழாவை மீண்டும் நல்லபடியாக நடத்தினார்களா என்பதே மீதிக்கதை. விஜய் சேதுபதி தனது அசத்தலான நடிப்பின் மூலம் தனித்து நிற்கிறார்.
நித்யா மேனன் அவருக்கு இணையாக இதுவரை அவர் நடித்திராத கதாபாத்திரத்தில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.
மற்றும் தீபாசங்கர்,யோகி பாபு,செம்பன், சரவணன்,ஆர் கே சுரேஷ்,வினோத்,காளி வெங்கட்,மைனா நந்தினி,அருள்தாஸ், வினோத் சாகர்,முத்துக்குமார்,சென்றாயன், ரோஷினி,ஹரிப்ரியன்,ஜானகி சுரேஷ், குழந்தை நட்சத்திரம் மகிழினி,கிச்சா ரவி, ரோஹன்,ஆதித்ய கதிர் என அனைவரும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் அவர்களின் இசையும், ஒளிப்பதிவாளர் சுகுமார் அவர்களின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்,திருமணங்களின் ஏற்படும் பிரச்சனைகள்,குடும்ப உறவுகளின் உணர்வுபூர்வமான விஷயங்கள் இவைகளை யதார்த்தமான முறையில் திரைக்கதை அமைத்து ஒரு உணர்ச்சிகரமான குடும்பப் படத்தை உருவாக்கியுள்ள இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கு பாராட்டுகள்.
தலைவன் தலைவி அனைத்து குடும்ப தலைவன் தலைவிகளும் காணவேண்டிய யதார்த்தம்.