மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஆகாயம் ” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.
தினந்தோறும் நாகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ” ஆகாயம் ” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் “ஆகாயம் ”
“தினந்தோறும்” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தினந்தோறும் நாகராஜ், அதன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களாலும், திரையுலகினராலும் அந்தப் பெயரிலேயே அன்புடன் அழைக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய “மின்னலே”, “காக்க காக்க” உள்ளிட்ட வெற்றிப் படங்களில் கதாசிரியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது. அவர், தற்போது “ஆகாயம்” திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
“கன்னி மாடம்” திரைப்படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் அனைவரின் கவனம் ஈர்த்த ஸ்ரீராம் கார்த்திக் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஆலிஷா மிராணி அறிமுகமாகிறார்.
மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், “மெய்யழகன்” படத்தில் நடித்த இந்துமதி மணிகண்டன், தீபா, “மகாராஜா” திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற சஞ்சனா நமீதாஸ், ரோசாரி, ரைட்டர் ஹரிஹரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“சென்னை டு சிங்கப்பூர்”, “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் நல்லமுத்து, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“நீர்ப்பறவை”, “அயோத்தி” உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த ரகுநந்தன், இப்படத்திற்கு இசையமைக்க,
பாடல்களை “நூறு சாமிகள் இருந்தாலும்” என்ற பிரபலமான அம்மா பாடலை எழுதிய ஏக்நாத், மற்றும் “காற்றோடு பட்டம் போல”, “நீலோத்தி” உள்ளிட்ட பாடல்களை எழுதிய சாரதி, ரமணிகாந்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
“ஒரு நொடி”, “ஜென்ம நட்சத்திரம்” ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்த சூர்யா, இப்படத்தின் எடிட்டிங்கை மேற்கொண்டுள்ளார்.
சண்டைப் பயிற்சியை பையர் கார்த்திக் அமைத்துள்ளார்.
நடன அமைப்பாளராக மணிகண்டன் பணியாற்றுகிறார்.
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்
தயாரிப்பு மேற்பார்வை : பிரசாந்த்
தயாரிப்பு : ஜெயச்சந்திரன், கார்த்திகா தேவி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தினந்தோறும் நாகராஜ்
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு குறித்து விரைவில் அறிவிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
