kollywood news

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து வாழ்த்தும் ஆசியும் பெற்றனர்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் – இயக்குனர் சேரன், பொதுச்செயலாளர் – பட்டுக்கோட்டை’ பிரபாகர், பொருளாளர் – R.சுந்தர்ராஜன், நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மரியாதை நிமிர்த்தமாக பெருமைமிகு மனிதரும் தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமையுமான சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து வாழ்த்தும் ஆசியும் பெற்றோம்..

 

 

இன்றைய கதை ஆசிரியர்களின் நிலை பற்றி பேசி அதை எப்படி எல்லோருடனும் பேசி சுமூகமாக எல்லோருக்கும் நன்மை கிடைக்கும்படி கையாள எங்களுக்கு ஆலோசனை வழங்கினார்.. திரையுலகில் வள்ளி, பாபா உட்பட கதையாசிரியராகவும் அவர் பணியாற்றி இருப்பதால் எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இணையும்படி நாங்கள் வைத்த கோரிக்கையை உடனடியாக ஏற்று சம்மதமும் தெரிவித்தார்.

 

நேரம் ஒதுக்கி எங்களோடு உரையாடிய மாண்புமிகு மனிதருக்கு நன்றி கூறி விடைபெற்றோம்..

#SWAN

Get real time updates directly on you device, subscribe now.