சினிமா எடுப்பது பற்றி எதுவுமே தெரியாத தயாரிப்பாளரும் சினிமா எடுக்கவே தெரியாத இயக்குநரும் என இருவரும் சேர்ந்து எடுத்த படம் எப்படி வந்தது, அதில் என்ன மாதிரியான ஏமாற்றங்களை சந்திக்கின்றனர் என்ன மாதிரியான பிரச்சனை களை தந்தது என்பதே கதை.
தயாரிப்பாளரை சுரண்டி படம் எடுப்பது எப்படி,எடுத்த படத்தை ஆஹாஓஹோவென தானே புகழ்ந்து கொள்வதாகட்டும், ஆர்யாவுடன் அப்பாயின்ட்மென்ட், சிம்புவுடன் சூட்டிங் என்பது போல் கெத்து காட்டுவதாகட்டும் தனக்கான பாணியில் அசால்ட்டாக நடித்திருக்கிறார் இயக்குனராக நடித்திருக்கும் நடராஜன் மணிகண்டன்.
ஹேமா ஜெனிலியா அழகாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் அப்பாவியாக நடித்துள்ளார்.
ரிஷா நடனம் மட்டும் அல்ல நடிக்கவும் தெரியும் என்பதை காண்பித்திருக்கிறார்.
முகமது கெளஷ் அப்பாவியான தனது பாத்திரத்தை நன்றாக செய்துள்ளார்.
இயக்குநர் நிதின் சாம்சன் எப்படியெல்லாம் ஒரு படம் எடுக்க தெரியாத தயாரிப்பாளரிடம் பணத்தை ஏமாற்றி கரக்கலாம் என்பதை இதைவிட யாரும் தெளிவாக சொல்லமுடியாது இதற்காகவே இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும் நிறைய அனபவப்பட்டு பக்குவப்பட்டுள்ளார் இதை தவிர்த்து இவரே ஒளிப்பதிவு,எடிட்டிங் போன்ற பணிகளையும் வெகு சிறப்பாக செய்துள்ளார் இதற்காக இவரை இன்னும் ஒரு முறை பாராட்டுவது தவறில்லை.
அனில் நலன் சக்ரவர்த்தி, ரித்திக் மாதவன் இசை படத்திற்கு பலம்.
திரையின் மறுபக்கம்’தெரியாமல் படம் எடுப்பவர்களுக்கு மிக சிறந்த பாடம்.
