‘TN 2026’  விமர்சனம்

நாயகன் நட்டி நட்ராஜ் வட மாநிலத்தை சேர்ந்தவர் பிழைப்பை தேடி சென்னை வருகிறார்.அங்கு ஒரு இயக்குனர் மூலம் முதல் பட வாய்ப்பு கிடைக்கிறது.அவரது முதல் படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெறுவதோடு மக்கள் மனதில் அடுத்த எம் ஜி ஆர் என்ற இடத்தையும் பிடித்து விடுகிறார். பொள்ளாச்சியில் ஜமீன்தாராக இருக்கும் தம்பி ராமையா எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருக்கிறார்.வளர்ந்து வரும் நட்டியை அடுத்த எம் ஜி ஆர் ஆக பார்க்கும் தம்பி ராமையா அவருக்கு தேவையான உதவிகளை செய்து அவரை சினிமாவில் உச்ச நடிகராக கொண்டு வருகிறார்.
200 கோடி ரூபாய் வருமானத்தில் உச்ச நடிகராக இருக்கும் நட்டியை அரசியலுக்கு கொண்டு வருவதற்காக புதிய கட்சி ஒன்றை தம்பி ராமையா தொடங்குகிறார்.2026 ஆம் ஆண்டு நட்டிதான் தமிழக முதல்வர் என்ற நம்பிக்கையை அவர் மனதில் ஏற்படுத்துகிறார்.
இதனையடுத்து ஆளும் கட்சியினரால் நட்டிக்கு பல வழிகளில் பிரச்சனைகள் வருகிறது.இந்நிலையில் நட்டிக்கு திடீர் என உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இறுதியில் நாயகன் நட்டி முதலமைச்சர் ஆனாரா இல்லையா அரசியலை விட்டு விலகினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
குல்கந்த் குமார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி நட்ராஜ் இயல்பான நடிப்பபை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஜமீன்தாராக நடித்திருக்கும் தம்பி ராமையா நட்டியை உச்ச நடிகராக ஆக்க எடுக்கும் முயற்சிகள் ரசிக்க முடிகிறது.அரசியலுக்கு வழிகாட்டியாகவும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
மற்றும் எம்.எஸ்.பாஸ்கர்,இளவரசு,சிருத்தா ராவ்,நடிகையாக வரும்  சாந்தினி தமிழரசன்,யாஷிகா ஆனந்த்,ரெடின் கிங்ஸ்லி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக தேர்ந்தெடக்கபட்டு சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தர்புகா சிவாவின் இசையும்,பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவும் கதைக்கு பலம்.
ஒரு முன்னணி நடிகரின் வளர்ச்சி,வாழ்கை,அரசியல்,ஆகியவற்றை மைய கருவாக வைத்து சிறந்த திரைக்கதையை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குநர் உமாபதி ராமையா அவர்களுக்கு பாராட்டுக்கள்.
‘TN 2026’அரசியல் கலந்த காமெடி நையாண்டி.