ட்ராமா விமர்சனம்

ட்ராமா மூன்று குடும்பங்களின் கதையாக ஆரம்பித்து பயணிக்கிறது.
இறுதியில் ஒரு புள்ளியில் அந்த குடும்பங்கள் எப்படி இணைகிறது என்பது தான் கதை.
விவேக் ப்ரசன்னா – சாந்தினி தம்பதிக்கு திருமணம் ஆனது முதல் குழந்தை இல்லை. இந்த நிலையில் விவேக் ப்ரசன்னா இறுதி முயற்சியாக ஒரு மருத்துவரிடம் மருந்து வாங்கி சாப்பிடுகிறார் இதனால் சாந்தினி கர்ப்பமாகிறார்… அந்த நேரத்தில் ஒரு மர்ம போன் வந்து அவரை அலற வைக்கிறது.
விவேக் பிரசன்னா மனைவி சாந்தினியின் ஆபாச வீடியோ ஒன்றை ரவுடி எடுத்து வைத்துக் கொண்டு 50 லட்சம் கேட்டு மிரட்டுகிறான்.
ஆட்டோ ஓட்டும் மாரிமுத்து மகள் ஒருவனை காதலிக்கிறார். அவன் அவளை கர்ப்பமாகி விட்டு மாயமாகி விடுகிறான்.மகள் நிலையை அறிந்து மாரிமுத்துவின் குடும்பம் நிலை குலைந்து போகிறது.
பிரதீப் கே விஜயன் மருத்துவர் என்கிற போர்வையில் செய்யத்தகாத பல விபரீத வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த மூன்று கதைகளைத்தான் ஒரே முடிச்சில் இணைத்து இருக்கிறார் இயக்குநர்.
விவேக் பிரசன்னா மனைவி சாந்தினியின் ஆபாச வீடியோவை எடுத்த ரவுடி யார் அவனது நோக்கம் என்ன ஆண்மை இல்லாத விவேக் பிரசன்னவின் மனைவி சாந்தினி திடீர் என்று எவ்வாறு கர்ப்பமாகிறார்.
ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்துவின் மகள் பூர்ணிமா தேவி தனது காதலனால் ஏமாற்றப்பட்டு காதலனை பார்க்கக்கூடாத நிலையில் பார்த்து ஏன் அதிர்கிறார்.இறுதியில் இவரின் நிலை என்னவாயிற்று.
பிரதீப் கே விஜயன் மருத்துவர் என்கிற போர்வையில் செய்யத்தகாத பல என்னென்ன விபரீத வேலைகளில் ஈடுபடுகிறார.என்பதே மீதிக்கதை.
பல படங்களில் வில்லன் மற்றும் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்திருக்கும் விவேக் பிரசன்னா ஹீரோவாக அறிமுகம்
ஆகியிருக்கிறார் இந்தப் படத்தில் கதையின் நாயகன் என்றாலும் சினிமா ஹீரோவுக்கான எந்த ஒரு பில்டப்பும் இல்லாமல் இயல்பாக நடித்துள்ளார்.
சாந்தினியும் வழக்கமான முறையில் இயல்பாக நடித்து இருக்கிறார்.
மற்றும் சஞ்சீவ்,பிரதோஷ்,அனந்பிரதோஷ், பூர்ணிமா தேவி,ரமா, மாரிமுத்து,நிழல்கள் ரவி ஆகிய அனைவரும் அவரவர் பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.
அஜித் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவும்.
ஆர்.எஸ்.ராஜ்பிரதாப்பின இசையும் படத்துக்கு பலம். முகன்வேலின் எடிட்டிங் அருமை.
மூன்று விதமான க்ரைம் கதைகளை ஒன்றாக இணைத்து எந்தவித குழப்பமும் இல்லாமல் சிறப்பாக இயக்கி இருக்கும் இயக்குநர் தம்பித்துரை மாரியப்பனுக்கு பாராட்டுகள்.
ட்ராமா இன்றைய காலகட்டத்தின் இளம் பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வு.