*இன்னும் இரண்டு எபிசோடுகள் மட்டுமே… ஆனால் அரியணைக்கு போட்டி மேலும் தீவிரம்: JioHotstar-ல் ஒளிபரப்பாகும் House of the Dragon சீசன் 3-ஐ மீண்டும் ஒரு முறை நினைவுகூர்வோம்!*
JioHotstar-ல் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் House of the Dragon சீசன் 3, துரோகங்கள், யுத்தங்கள் மற்றும் மனதை உடைக்கும் சம்பவங்களால் நிரம்பி, இறுதிக்கட்டத்தை நோக்கி வேகமாக நகர்கிறது. முதல் எபிசோடிலேயே அதிர்ச்சியூட்டிய இந்த சீசன், சமீபத்திய அத்தியாயங்களில் மேலும் பல திருப்பங்களைக் கொடுத்து ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கிறது. இறுதிப் போட்டிக்கு இன்னும் இரண்டு எபிசோடுகள் மட்டுமே உள்ள நிலையில், இந்த சீசனின் முக்கிய தருணங்களையும், இன்னும் பதில் கிடைக்காத கேள்விகளையும் பார்ப்போம்.

*அதிர்ச்சியூட்டிய தொடக்கப் போர்*
சீசன் 3 தொடங்கிய முதலே கதையின் பரபரப்பை உயர்த்தியது. மிகப் பெரிய கடற்படைக் போரில், ரேனீரா டார்கேரியனின் மகனும் வாரிசுமான ஜேசேரிஸ் டார்கேரியன் (Jacaerys Targaryen), தனது டிராகன் வெர்மாக்ஸ் (Vermax) கடலில் வீழ்ந்ததைத் தொடர்ந்து உயிரிழக்கிறார். இந்த இழப்பு, டார்கேரியன் குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.
*டம்பிள்டனின் வீழ்ச்சி*
அமைதியாக இருந்த டம்பிள்டன் நகரம், சீசனின் முக்கிய போர்க்களங்களில் ஒன்றாக மாறியது. ஓர்மண்ட் தலைமையிலான ஹைடவர் படைகள் நகரை கைப்பற்றி, அங்குள்ள மக்களை பிணைக்கைதிகளாக மாற்றின. இதனால் ரேனீராவுக்கு அரசியல் ரீதியாக பெரிய பின்னடைவு ஏற்பட்டது. கிரீன்ஸ் அணியை தாக்குவது தனது மக்களையே ஆபத்தில் ஆழ்த்தும் என்பதால், விருப்பமின்றி அவர் பின்வாங்க வேண்டிய சூழல் உருவானது.
*துயரம், குற்றவுணர்வு மற்றும் தந்தையின் உணர்வுகள்*
போர் தீவிரமடைந்ததுடன், அதன் தனிப்பட்ட தாக்கங்களும் பெருகின. ரேனீரா தனது துயரத்தையும் அரச பொறுப்புகளையும் சமநிலைப்படுத்த போராட, டேமன் தனது மகள் ரேனாவுடன் உணர்ச்சிப்பூர்வமான தருணத்தை பகிர்ந்துகொண்டார். அதே நேரத்தில், பின்னணியில் இயங்கிய ஒரு புதிய சக்தி, இளம் டார்கேரியன் ஒருவரை ஆபத்தான பாதைக்கு இழுத்துச் செல்லத் தொடங்கியது.

*விடுதலை, சிறை மற்றும் முறிவின் தருணங்கள்*
இந்த சீசனின் மிகவும் பாராட்டப்பட்ட எபிசோடுகளில் ஒன்றில், ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரமும் ஒருவிதமான விடுதலையைத் தேடுகின்றனர். அலிசெண்ட் தனது சிறைவாசத்திலிருந்து தப்ப முயற்சிக்க, கிரிஸ்டன் கோல் இந்தப் போர் தன்னை மாற்றிய விதத்திலிருந்து விடுபட விரும்புகிறார். அதே சமயம், லாரிஸ் மற்றும் ஏகன் இடையேயான நீண்டகால மோதல் வெளிப்படையாக வெடிக்கிறது. மேலும், சிட்டி வாச்சில் ஊழல் அதிகரிப்பதை குறித்து டேமனும் ரேனீராவும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
*கிரிஸ்டன் கோலின் அதிர்ச்சி மரணம்*
தனது கனவுகளில் இருந்த வீரமரணத்தை அடையப் போகிறார் என தோன்றிய தருணத்தில், கிரிஸ்டன் கோல் எதிர்பாராத அம்புத் தாக்குதலில் கொல்லப்படுகிறார். அலிசெண்டின் கைக்குட்டையை கையில் வைத்தபடியே அவர் உயிரிழக்கிறார். அதே எபிசோடில், கார்லிஸ் வெலாரியன் ஓர்மண்டின் படைகளால் சிறைபிடிக்கப்படுகிறார். ஏமண்டின் இருப்பிடம் கிட்டத்தட்ட வெளிப்படுகிறது. மேலும், மறைத்து வைக்கப்பட்டிருந்த டிராகன் முட்டைகள் பற்றிய அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்து, போரின் சமநிலையை மாற்றுகிறது.
*இப்போது நிலைமை என்ன?*
கிரிஸ்டன் கோல் உயிரிழந்துள்ளார். கார்லிஸ் சிறையில் உள்ளார். ஏமண்ட் மீண்டும் போர்க்களத்திற்கு திரும்பத் தயாராகிறார். இதனால் House of the Dragon அதன் இறுதி இரண்டு எபிசோடுகளுக்குள் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நுழைகிறது. துயரம் ஆட்சிக் கனவாக மாறியுள்ளது; இரகசியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவருகின்றன; டிராகன்களின் நடனம் (Dance of the Dragons) வெஸ்டெரோஸின் வரலாற்றை நிரந்தரமாக மாற்றப் போகும் இறுதிக்கட்டத்தை நோக்கி பாய்கிறது.

இறுதிப் பகுதியை தவறவிடாதீர்கள். House of the Dragon சீசன் 3-ன் அனைத்து எபிசோடுகளையும் JioHotstar-ல் இப்போது ஸ்ட்ரீம் செய்யுங்கள்.
