வடம் விமர்சனம்

நாயகன் விமல் சிறுவயதிலிருந்து காளை மாடு பாண்டி முனியை அன்பாக வளர்த்துவருகிறார்.வட மாடு போட்டியில் பாண்டி முனி ஜெயிப்பதை கண்டு பொறாமை கொள்ளும் நட்டி அந்த மாட்டை தனக்கு தரும்படி விமலிடம் கேட்கிறார்.அதற்கு விமல் மறுத்து விட நட்டி கோபமடைகிறார் விமலை பழிவாங்க நினைக்கிறார்.ஒரு கட்டத்தில் விமலையும், பாண்டி முனியையும் கொல்ல ரவுடி கூட்டம் சுற்றி வருகிறது.அடுத்து நடந்தது என்ன, விமலும் பாண்டி முனியும் ரவுடிகளிடம் இருந்து தப்பித்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.
விமல் வழக்கமாக தனது பாணியில் எதார்த்தமாக சிறப்பாக நடித்துள்ளார்.
சனக்ஷா ஸ்ரீ வழக்கமாக வந்து போகும் கதாநாயகி.
மற்றும் நட்டி நட்ராஜ்,முனிஷ்காந்த்,நரேன், இந்துமதி,பால சரவணன்,மது சூதனன், தீபா சங்கர் ஆகியோர் அவர்களது பணியினை சிறப்பாக செய்துள்ளனர்.
டி இமானின் இசையும்,பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவும் கதைக்கு பலம்.
வழக்கமான ஜல்லிக்கட்டு போட்டியிலி
ருந்து வேறுபட்டு வடமாடு போட்டிக் களத்தை புதிய வடிவில் திரைக்கதை அமைத்து சிறந்த முறையில் இயக்கி இருக்கும் இயக்குனர் கேந்திரன் வி அவர்களுக்கு பாராட்டுகள்.
வடம் வித்தியாசமான கதைக்களம்.