’வலிமை’ விமர்சனம்

 


சதுரங்க வேட்டை’,’தீரன் அதிகாரம் ஒன்று’,’நேர்கொண்ட பார்வை’ ஆகிய மூன்று படங்களைக் இயக்கிய இயக்குநர் ஹெச்.வினோத்தின் நான்காவது படம் இந்த ’வலிமை’. அஜித் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான விருந்தளித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். கொலம்பியாவில் தயாரிக்கப்படும் ஆபத்தான போதைப் பொருட்கள் கடத்தல் ஆசாமிகளால் சென்னைக்கு சப்ளை செய்யப்பட்டு அதை பயன்படுத்தும் மாணவர்கள் சீரழிகிறார்கள். அதைக் கண்டு சென்னை கமிஷனர் மனம் புழுங்கி,’இந்த அநியாயத்தைத் தட்டிக்கேட்க ஒருத்தன் நிச்சயம் வருவான்’ என்று தவிக்க காவல் துறை உயர்பதவியில் இருக்கும் அஜித் மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றல் ஆகி வந்து, அந்த கும்பலை பந்தாடி, கெட்டுப்போன இளைஞர்களைப் பெற்றோரோடு சேர்த்துவைக்கிறார்.இந்த கதை ஏன் மூன்று மணி நேரம் போகிறது என்று தான் தெரியவில்லை. தம்பி செண்டிமெண்ட் , படத்தின் முடிவில் ஹீரோவின் பெற்றோர் மற்றும் உறவினர்களை வில்லன் கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டுவது போன்ற பல காட்சிகள் வழக்கம் போல் உண்டு. படத்தில் இடம் பெறும் பைக் ரேஸ்கள் இதுவரை இந்திய சினிமாவில் வராத ஒன்று என்று கூட சொல்லலாம்.
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் சூப்பர் இருக்கிறது அஜித்.எப்போதும் போல் அவரது பணியை சிறப்பாக செய்து ள்ளார்.நாயகியான ஹிமா குரோஷி மனசைக் கொள்ளை அடிக்கிறார்.இவர்கள் இருவருக்கும் காதல், டூயட் என்று எதுவும் வைக்காமல் காட்சிகளை வெகு சாமர்த்தியமாக கையாண்டிருக்கிறார் வினோத். படத்தின் இன்னொரு நாயகனாக, அஜித்தின் தம்பியாக வரும் ராஜ் அய்யப்பா நடிப்பிலும் தோற்றத்திலும் கவனம் ஈர்க்கிறார். வில்லன் கார்த்திகேயாவும் அஜித்துக்கு இணையாக நடிப்பை கொடுத்திருகிறார்.
இரண்டே பாடல்களில் யுவன் முத்திரை பதிக்க, பின்னணி இசையில் ஜிப்ரான் பின்னி எடுக்கிறார்.
உலகத்தரமான பைக் ரேஸ் காட்சிகள், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், வழக்கமான மசாலாக் காட்சிகளைக் கூட தனது பிரமாதமான மேக்கிங்கில் விறுவிறுப்பாகக் கொண்டு சென்றிருக்கும் ஹெச்.வினோத்திற்கு ஒரு பெரிய பாராட்டு.