சூரஜ்,அருண்மொழி வர்மன் என இரு மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நாயகன் கண்ணா ரவி நடித்திருக்கிறார்.வளர்ந்து வரும் நடிகர் சூரஜ் (கண்ணா ரவி) என்கவுண்டர் போலீஸ் அருண் (கண்ணா ரவி)வாழ்க்கை கதையில் நடிக்க வாய்ப்பு வருகிறது.அதில் நடிக்க ஒப்புக்கொள்கிறார். அந்த கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அவர் தனது கல்லூரி காதலியின் கணவனான சஞ்சீவை என்கவுண்டர் செய்கிறார். ஆனால் அவரோ பலருக்கும் நன்மைகள் செய்து ஊரில் மக்களின் மதிப்பை பெற்றவராக இருக்கிறார். இதனால் குழப்பமடையும் கண்ணா ரவி மன உளைச்சலுக்கு ஆளாகிறார். நல்லவர் ஒருவரை சுட்டுக் கொன்று விட்டோமோ என மனவேதனையில் துடிக்கிறார். இதில் அருண் எடுக்கும் முடிவு என்ன என்பதே மீதிக்கதை.
கண்ணா ரவி இரு மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.
ரவுடி கதாபாத்திரத்தில் சஞ்சீவ் வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மற்ற கதாபாத்திரங்களான ஸ்ரவ்நிதா ஶ்ரீ காந்த்,ஐஸ்வர்யா ரகுபதி,விணுஷா தேவி, லாவண்யா,ரேகா நாயர்,பார்வதி,ஜீவா ரவி ஆகியோர் சிறப்பாக நடித்து அவரவர் திறமையை நிரூபித்துள்ளனர்.
விபின் சாகர் இசையும்,ஒளிப்பதிவாளர் சீனிவாசன் தேவராஜ் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலத்தை தந்துள்ளது.
இயக்குனர் பவன் இப்படி ஒரு கதையை யோசித்து அதற்கேற்ற கதாபாத்திரங்களை உருவாக்கி திறமையான முறையில் இயக்கியுள்ளார் வாழ்த்துக்கள்,பாராட்டுகள்.
வேடுவன் சிறந்த வேட்டைக்காரன்.
