வெஞ்சன்ஸ் விமர்சனம்

அபர்நிதி தனது பள்ளிப் பருவத்தில் பள்ளிக்கூடத்தில் தன்னை யாருமே கண்டு கொள்வதில்லை என்று தந்தையிடம் வருத்தப்படுகிறாள்.மாவட்டத்திலேயே முதல் மாணவியாக வந்தால் உன்னை எல்லோரும் பாராட்டுவார்கள் என்று தந்தை சொல்ல அதை கேட்டு வேணி முதல் மாணவியாக வருகிறாள்.மீடியாக்கள் அவரை பிரபலப்படுத்துகின்றன.இதில் மகிழ்ச்சி அடையும் அபர்நிதிக்கு அந்த மகிழ்ச்சி இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே நீடிப்பதால் மீண்டும் புகழ் போதைக்கு அடிமையாகி அதை தேடுகிறார்.ஒரு கட்டத்தில் தனது தந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்து பிரபலம் ஆகிறாள்.வருங்காலத்தில் படித்து மாவட்ட கலெக்டராக பதவி ஏற்கும் அபர்நிதி தனது புகழ் போதைக்காக என்னென்ன அடாவடித்தனங்களை மறைமுகமாக செய்து தன்னை பிரபலப்படுத்திக் கொள்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
அபர்நிதி ஹீரோ,ஹீரோயின் இரு கதாபாத்திரங்களாக தன்னை நிலை நிறுத்தி சவாலாக சிறப்பாக நடித்துள்ளார்.
மற்றும் இளவரசு,ஜான் விஜய்,ஒய் ஜி மகேந்திரன்,லிவிங்ஸ்டன்,காளி வெங்கட், சரவணன் சுப்பையா,சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவும்,கார்த்திக் ராஜா,அருண் ராஜ் அவர்களின் இசையும் கதைக்கு கூடுதல் பலம்.
ஒரு கலெக்டரால் இவ்வாரெல்லாம் செய்ய முடியுமா என்ற ஒரு ஆச்சரியத்தை தரும் வகையில் சிறந்த திரைக்கதை அமைத்து படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் ராகுல் அசோக் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.
வெஞ்சன்ஸ் ஒரு பெண் கலெக்டரின் ஆளுமை.