“வீரபாண்டியபுரம்” விமர்சனம்

 

லென்டி ஸ்டுடியோ சார்பில் வீரபாண்டியபுரம் படத்தில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், அகன்ஷா சிங், பாலசரவணன், ஹரீஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட், சரத் லோகிதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். இசை-ஜெய், ஒளிப்பதிவு-வேல்ராஜ், மக்கள் தொடர்பு-சுரேஷ்சந்திரா, ரேகா.
ஜெயபிரகாஷ் குடும்பம், சரத் லோகிதாஸ் குடும்பம் இரண்டு கிராமங்களைச் சேர்ந்த பெரிய மனிதர்கள். இருவருக்குள்ளும் நீண்ட நாட்களாக பகை இருக்க, இருவரும் பழிவாங்க சமயம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். சரத்தின் மகள் மீனாட்சி ஜெய்யை காதலித்து கரம் பிடிக்க நினைக்கிறார். முதலில் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளும் பெற்றோரை இழந்த ஜெய், பின்னர் மீனாட்சியிடம் அவரின் பெற்றோர் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்கிறார். அதனால் மீனாட்சியின் கிராமத்திற்கு வந்து சரத்திடம் தன் காதலைச் சொல்லி சம்மதம் வாங்குகிறார். முதலில் மறுத்தாலும் பின்னர் சம்மதிக்கும் சரத் எதற்காக இந்த முடிவை எடுத்தார்? இதன் பின்னணி காரணம் என்ன? இந்த திருமணத்தை ஜெயபிரகாஷ் பழி வாங்க பயன்படுத்திக்கொண்டாரா? நடந்தது என்ன? என்பதே கதையின் முடிவு.
ஜெய் அமைதியும், அடக்கமும் நிறைந்த கிராமத்து இளைஞராக இயல்பாகவும், அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளில் அதிராடியாகவும் நடித்துள்ளார். மீனாட்சி கோவிந்தராஜன், அகன்ஷா சிங் இரு கதாநாயகிகளும் கொடுத்த வேலையை திறம்பட செய்துள்ளனர்.பாலசரவணன், ஹரீஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட், சரத் லோகிதாஸ் மற்றும் பலர் கிராமத்து கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.
இசை-ஜெய், ஒளிப்பதிவு-வேல்ராஜ் ஆகிய இருவரின் பங்களிப்பு படத்திற்கு வலு சேர்த்துள்ளது.
இயக்கம் சுசீந்திரன். இரு கிராமத்து பகையை காதல், பழி வாங்குதல், ஆக்ஷன் கலந்த வன்முறை காட்சிளுடன் கலந்து விரு விருப்பாக கொடுத்து இருக்கிறார்.
மொத்தத்தில் வீரபாண்டியபுரம் அதிரடி ஆக்க்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லை.