ஏழு கடல் ஏழு மலை விமர்சனம்

நிவின் பாலி எட்டாயிரம் ஆண்டுகளாக கதைப்படி வாழ்ந்து வகுகிறார்.அவரது காதலியான அஞ்சலி ஒவ்வொரு காலகட்டத்திலும் இறந்து மீண்டும் மறுபிறவி எடுத்து வருகிறார்.இவ்வாறு இருக்கும் நிலையில் கதை 1985 ஆம் ஆண்டுக்கு வருகிறார். தீபாவளி சிறப்பு ரயிலில் நிவின்பாலி தூங்கி கொண்டு இருக்கிறார்.அதே ரயிலில் துபாயில் கடந்த 8 வருடங்களாக வேலை பார்த்துவிட்டு தீபாவளிக்காக ஊருக்கு வரும் சூரி அதே ரயிலில் ஏறுகிறார்.துங்கக் கொண்டிருந்த நிவின் பாலியை தட்டி எழுப்புகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த நிவின் பாலி சூரியை அடித்து துவசம் செய்கிறார். அடிதாங்க மாட்டாமல் பயந்து நடுங்குகிறார் சூரி.இதற்கிடையே அதே ரயிலில் ஒரு எலியும் வாழ்ந்து வருகிறது.அந்த எலிக்கு நிவின் பாலி பிஸ்கட் எல்லாம் கொடுத்து அன்போடு தடவி கொடுத்து அதன்மீது பாசத்தை பொழிகிறார்.மனிதர்களைத் தவிர மற்ற உயிரனங்கள் மீது ஏன் அன்பு செலுத்துகிறார் இவர்.இந்த கால கட்டத்தில் நிவின் பாலி தனது காதலியை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே மீதிக்கதை.
நவின் பாலியின் நடிப்பு அபாரமாக பொருந்தி உள்ளது.
சூரியும்,அஞ்சலியும் அவரவர் தங்களுக்கு உரிய தனித்துவ நடிப்பை கொடுத்து அசத்தியுள்ளனர்.
ஒரு எலியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது.
ஏகாம்பரம் ஒளிப்பதிவும்,யுவன் சங்கர் ராஜாவின் இசையும் படத்தின் பெரிய பலம்.
அனைத்து உயிர்களும் சமம் என்பதை மையக்கருவாக கையில் எடுத்து அதை சிறந்த திரைக்கதையாக உருவாக்கி பழங்காலத்தில் பாட்டியிடம் பேரன் அல்லது அம்மாவிடம் மகன் கதை சொல்லச் சொல்லி கேட்பான்.அப்போது அம்மா அல்லது பாட்டி சொல்லுவார்கள் ஒருகாலத்தில் ஏழு கடல் ஏழு மலையை தாண்டி ஒரு காட்டு மரப்பொந்தில் ஒரு கிளி இருக்கும். மந்திவரவாதியின் உயிர் அந்த கிளியில் இருக்கும். அந்த கிளியை கொன்றால்தான் மந்திரவாதி சாவான்.அதனால் ஒரு வீரன் அந்த கிளியை பிடிக்க ஏழு கடலுக்கு அப்பால் தோனியில் போவான். என்று கதை சொல்ல ஆரம்பிப்பார்கள். அப்படி இந்த கதையை அழகாக ஆரம்பித்து இந்த கதையை சொல்லி மிக அழகாக இயக்கி இருக்கும் இயக்குனர் ராம் அவர்களுக்கு பாராட்டுகள்.
ஏழு கடல் ஏழு மலை உணர்வுப்பூர்வம்.