யூத் விமர்சனம்

கதையின் நாயகன் கென் கருணாஸ் பத்தாம் வகுப்பு மாணவனாக சிம்பு மற்றும் தனுஷ் போன்ற நட்சத்திரங்கள் தீவிர ரசிகராக உள்ளான்.பேக்கரி வைத்திருக்கும் கண்டிப்பான தந்தை சூரஜ் வெஞ்சாரமூடு மற்றும் பாசமான தாய் தேவதர்ஷினி ஆகியோருக்கு இடையே படிப்பு மற்றும் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் இவரது வாழ்க்கை நகர்கிறது.உண்மையான காதலை கண்டுபிடிப்பதே தன் வாழ்நாள் லட்சியம் எனத் திரியும் இவர் பள்ளியில் தண்டனை பெற்று வகுப்புக்கு வெளியே நிற்கும் போது மீனாட்சி தினேஷ் என்பவர் சந்திப்பதில் தொடங்கும் அவரது காதல் பயணம்,பின்னர் பிரியான்ஷி மற்றும் அனிஷ்மா என அடுத்தடுத்து மூன்று காதல்கள் அரங்கேறி பல திருப்பங்களை சந்திக்கிறது.இந்த பருவத்தில் வரும் குழப்பங்கள்,ஈர்ப்புகள்,நட்பு,காதல் தரும் வலிகள்,பெற்றோரின் தியாகம் மற்றும் குடும்ப உறவுகளின் முதிர்ச்சி ஆகியவை இவர் வாழ்க்கையில் எப்படியான தாக்கங்களையும்,மாற்றங்களையும் கொண்டு வருகின்றன என்பதே படத்தின் மீதிக்கதை.
கென் ஒரு இயக்குநராகவும் நடிகராகவும் ஸ்கோர் செய்துள்ளார்.
மாணவிகளாக மீனாட்சி தினேஷ்,அனிஷ்மா அனில்குமார்,பிரியான்ஷி யாதவ் ஆகியோர் பள்ளிப் பருவக் காதலை மிக அழகாக வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளனர்.
மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு,தேவதர்ஷினி,ந​ளினி,சின்னத் தமிழா,தாஜ் மோலா,கெட்டவன் மணிகண்டன்,சுரேன் வின்சென்ட் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையும்,ஒளிப்பதிவாளர் விக்கியின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
கென் கருணாஸ் ஒரு இயக்குனராக வெறும் காதல் கதையாக மட்டும் நிறுத்தி விடாமல், அந்த ஜாலியான சூழல் மாறி,குடும்பப் பொறுப்பு,பெற்றோரின் அன்பு மற்றும் தந்தை-மகன் உறவை மிக அழகாக கையாண்டு சிறந்த திரைக்கதை அமைத்து காமெடியுடன் எமோஷனலான பாதையில் இயக்கியுள்ளார் அவருக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள்.
யூத் நமது கடந்த கால பள்ளி வாழ்க்கை.