நாயகி பிரியா பவானி சங்கரும் நாயகன் சத்யதேவும் இருவேறு தனியார் வங்கியில் வேலை செய்கிறார்.
இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர்.
இன்னிலையில் ப்ரியா பவானி சங்கர் பணிபுரியும் வங்கிகணக்கில் இருந்து தவறாக நான்கு லட்சம் ரூபாய் பணத்தை வேறுஒருவருக்கு மாற்றுகிறார்.
அந்தப் பணத்தை வைத்திருப்பவர் தவறான கணக்கில் வந்தரூபாய் நான்கு லட்சத்தை திருப்பி தராமல் பிரச்சனை செய்கிறார்.
இந்த பிரச்சனையில் சத்யதேவ் சாமர்த்தியமாக தலையிட்டு தனது திறமையை பயன்படுத்தி
பணத்தை தனக்கே உரிய முறையில் மீட்டெடுத்து பிரியா பவானி சங்கரை இந்த பிரச்சினையில இருந்து காப்பாற்றுகிறார்.
இந்நிலையில் மற்றொரு பக்கம் இந்த பண விவகாரத்தில் மிக பெரிய கேங்க்ஸ்டர் டாலி தனஞ்சயாவுக்கு தொடர்பு இருப்பது பின்னால் சத்யதேவுக்கு தெரிய வருகிறது.
சத்யதேவ் செய்த இந்த பண பரிவர்த்தனையில் டாலி தனஞ்செயாவிற்கு ஐந்து கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட அதை நான்கு நாட்களுக்குள் திருப்பி கொடுக்காவிட்டால் சத்யதேவை கொன்று விடுவதாக மிரட்டுகிறார் டாலி தனஞ்செயா.
டாலி தனஞ்செயா சொன்ன நான்கு நாட்களுக்குள் ஐந்து கோடி ரூபாயை நாயகன் சத்யதேவ் தன் திறமையால் அவருக்கு கொடுத்தாரா இல்லையா என்பதே மீதிக்கதை.
இயல்பான நடிப்பில் நாயகன் சத்யதேவ் தனது திறமையை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
ப்ரியா பவானி சங்கர் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கின்றார்.
மற்றும் டாலி தனஞ்சயா,சத்யராஜ்,சுனில் வர்மா,சத்யா,கருடா ராம்,ஜெனிபர்,சுரேஷ் மேனன் என படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
ரவி பஸ்ரூரின் இசையும், சத்யா பொன்மர் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் எதிர்பாராத திருப்பங்களுடன் அனைவரும் ரசிக்கும்படியான படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் அவர்களுக்கு பாராட்டுகள்.
‘’ஜீப்ரா’’விறுவிறுப்பு வேகம்.