“முடிவில்லா புன்னகை” படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இயக்குனர் வேலுபிரபாகரன் கூறுகையில்,
“இப்படத்தின் பாடல்களைக் கேட்கும்போது நான் எதிர்பார்த்ததைவிட நல்ல கருத்துக்கள் இருக்கிறது. ‘கவலை’ என்கிற பாடல் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. ஆனால், கருப்பர்கள் மண்ணில் கருப்பாகஒரு பெண்ணைப் பார்த்து பயப்படுவது என்பது போன்ற விஷயங்கள் வேடிக்கையாக இருக்கிறது. ரத்னகுமாரைப் பார்க்கும்போது, கிழக்குச் சீமையிலே படம் புத்திசாலித்தனமாக திரைக்கதைஅமைப்பாளர்கள் மலையாத்தில் தமிழில் பஞ்சு கமர்சியலாக படமெடுப்பார்.
ஆனால், எம்.டி.வாசுதேவநாயர் மாதிரி இலக்கிய நடையில் எழுதக் கூடியவர்கள் தமிழில் இல்லை. எழுத்தாளர்கள்இல்லாத சினிமா என்றிருக்கையில், ‘கிழக்குச் சீமையிலே’ பார்த்தேன். மண் மணம் மாறாமல் அவருடைய எழுத்து இருந்தது. அதன்பிறகு ‘கடவுள்’ படத்திற்கு வசனம் எழுத அழைத்தேன். நான்‘கடவுள்‘ படம் எடுப்பதற்கு முன் கடவுள் பற்றிய விவாதங்களே கிடையாது. பெரியாருக்கு பிறகு 20 வருடங்கள் மறைந்து விட்டது. ஆனால், நாங்கள் அதை கையில் எடுக்கும்போது எல்லோரும்சிரித்தார்கள்.
ஜெயதேவி பல வகையில் எங்களுக்கு ஆதரவாக இருந்தாலும், இப்படம் பற்றி பேசும்போது அவர்களும் சிரித்தார்கள். ஏனென்றால், இக்கதையைக் கூறி நீங்கள் தான் இயக்க வேண்டும். இப்படத்தால் பெரிய புரட்சி எழும் என்று. ஆனால், நான் நினைத்த மாதிரி அப்படம் அமையவில்லையென்றாலும், இப்படம் அதனுடைய வேலையைச் செய்யும் என்று தயாரிப்பாளரிடம் கூறினேன்.சுப.வீர.பாண்டியனும் அப்படத்தைப் பார்த்துவிட்டு இன்னும் கொஞ்சம் வேறுமாதிரி செய்திருந்தால் தமிழ்நாட்டில் அடுத்தகட்ட புரட்சி வெடித்திருக்கும் என்று கூறினார்.
ஒரு கட்டத்தில் என் பகுத்தறிவு போய்விட்டது என்று நினைத்தேன். மீண்டும் என்னால் பகுத்தறிவு வளர்ந்தால் அதற்கு சேலம் ஆர்.ஆர்.பிரியாணி தமிழ்செல்வன் தான் முழுமுதற்காரணமாகஇருக்கார்.
பெண் சுதந்திரம் இன்னும் நம் நாட்டிற்கு கிடைக்கவில்லை. அதிலும் சினிமாவில் பெண்களை போகப்பொருளாக மட்டுமே சித்தரிக்கிறார்கள். நம்நாட்டில் ‘யு’ சான்றிதழ் வாங்கிய ஒரு படம்அமெரிக்காவில் ‘ஏ’ சான்றிதழ் பெறுகிறது. காதலையும், காமத்தையும் மட்டும் கூறுகிறார்கள். இயக்குநர் ஷங்கர் கூட இம்மாதிரியான சினிமா இயக்குவது வேதனையாக இருக்கிறது.
‘முடிவில்லா புன்னகை’ திரைப்படம் பெண் சுதந்திரத்திற்கு ஆதரவாக நல்ல கருத்துக்களைக் கொண்டுள்ளது. இப்படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.”
இவ்வாறு வேலு பிரபாகரன் கூறினார்.
சேலம் ஆர்.ஆர்.தமிழ்செல்வன் கூறுகையில்,
“அமெரிக்காவில் இருந்தாலும், பிறந்த மண்ணையும், மொழியையும் மறக்காமல் இத்திரைப்படத்தை இயற்றி, தாங்கள் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறார் க்ளமெண்ட். அவருக்கு எனது பாராட்டுக்கள். நான் நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்தாலும் பெரியாரை பின்பற்றுகிறவன் தான். வேலு பிரபாகரன் எனது நெருங்கிய நண்பர். நான் நெய் சாப்பிட்டு கடவுளைவணங்குபவன் அல்ல. தன் குழந்தையை சுமந்துகொண்டு துணிச்சலாக நெருப்பில் இறங்கும் பெண்ணை வணங்குபவன்.
மேலும், இயற்கை உணவு உண்ணுங்கள். இயற்கையாக வாழுங்கள். நம் மண்ணின் உணவுக்கு முக்கியத்துவம் தாருங்கள். தினமும் நெல்லிக்காயும், கறிவேப்பிலையும் சாப்பிட பழகுங்கள். உங்கள்குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுங்கள். குக்கரில் சமைக்காதீர்கள்” என்று தமிழ்செல்வன் கூறினார்.
திருமதி ஜெயதேவி கூறுகையில் ,
‘முடிவில்லா புன்னகை‘ படத்தைப் பார்த்தேன். பெண் சுதந்திரம் என்று பேசும் இந்நாட்டில், அனுசரித்து வாழ் என்ற கூற்று தவறு. ஏனென்றால், சிரிப்பு மகிழ்ச்சி என்பது மனிதகுலத்திற்கே உரித்தானஒன்று. அனுசரித்து வாழ்வதால் மகிழ்ச்சி வராது. என் வாழ்க்கையை நான் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன் என்று கதாநாயகி முடிவெடுக்கிறாள்.
பெண் சுதந்திரத்திற்கு பல கருத்துக்களை இப்படம்கொண்டிருக்கிறது. தாய்மை உணர்வு அனைத்து பெண்களிடத்திலும் உள்ளது. உலகமே பெண்களுக்குள் இருக்கிறது. ஆண்கள் தான் பெண்களை மேன்மைபடுத்த முடியும். இருப்பினும், பெண்ணுக்குள்தான் ஆண் அடங்குவான். ஆகையால், பெண் விடுதலையின்றி இவ்வுலகம் சிறக்காது என்று கூறினார்.
நடிகர் லிவிங்ஸ்டன் கூறுகையில் ,
எனக்கு நடிக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்ததில்லை. ஆனால், அப்போதே வேலுபிரபாகரன் நீ நிச்சயம் நடிகனாவாய் என்று கூறினார். நான் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனாலும், ஒருகட்டத்தில் ரூ.10க்கு சிரமப்பட்ட காலத்தில் கதை எழுதுவதற்காக ரூ.5000 கொடுத்தார் ஜெயதேவி.
இப்படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால், ஜெயதேவி கூறியதைப் பார்க்கும்போது நல்ல கருத்தைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.
கதாசிரியர் ரத்னகுமார் கூறுகையில் ,
சினிமா என்கிற கடலில் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி தமிழ்செல்வனும் குதித்துவிட்டார். அவர் அதற்கு தகுதியானவர் தான். சினிமாவில் பலர் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் எதிர்நீச்சல்அடித்திருக்கிறார்கள். ஒரு உறுப்பினராக, தனிமனிதனாக அவரை வரவேற்கிறேன்.
இப்படத்தைப் பற்றி பேசுங்கள் என்று யாரிடமும் சொல்லாதீர்கள். படத்தை நன்றாக இருந்தால் அதுவே பேச வைக்கும். பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் இவர்களெல்லாம் பேசப்படாத, பேசவாய்ப்பற்ற மனிதர்கள். முன்பெல்லாம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு வேறு மாதிரி இருக்கும். ஆனால் இப்பொழுது செல்போன் இருக்கிறது. அப்பொழுதெல்லாம் போஸ்டர் ஒட்டுவதே பெரும்பாடாகஇருக்கும். ஆனால், இப்பொழுது டிஜிட்டல் வந்தபிறகு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்று வெளியிடுகிறார்கள். கதாசிரியராக இப்படத்தின் டிஸரை பார்க்கும்போது ஏதோ ஒரு கருத்து இருக்கிறது என்பதுமட்டும் புரிகிறது.
அன்று ஒரு படத்திற்கு ஆகும் செலவை இன்று, ஒரு பாடலுக்கு செலவழிக்கிறார்கள். ‘கிழக்கு சீமையிலே’ படத்திற்காக நான் எழுதும்போது பஞ்சாயத்து காட்சியை பாரதிராஜா நீளமாக இருக்கிறது, நிறைய செலவாகும், ஆகையால் வேண்டாம் என்று கூறினார். ஆனால், விஜயகுமார் நான் செலவு செய்கிறேன் என்று கூறியதால் அந்த காட்சி எடுக்கப்பட்டது. அப்படத்தில் ஒரு ரீடேக் இல்லாமல்எடுத்தார். ஆனால், டிஜிட்டல் வந்தபிறகு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
படமெடுங்கள், ஆனால் நல்ல படமாக எடுங்கள். பாரதிராஜா அவர்கள் அம்மா இறந்ததற்கு கூட அழுது நான் பார்க்கவில்லை. ‘பரியேறும் பெருமாள்’ படத்தைப் பார்த்து அழுதுவிட்டார். அப்படத்தில்நாய் இறந்ததற்கு அழுதார். நானும் மண் மணம் மாறாமல் படம் எடுக்கிறேன். ஆனால், இது வேறு கோணத்தில் அதே மண் மணம் மாறாமல் எடுத்திருக்கிறார் இயக்குநர் என்று கூறினார் பாரதிராஜா.சினிமா எடுத்து வெற்றிபெற விரும்பினால் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் பொருந்துபவர்களை வைத்து தான் எடுக்க வேண்டும். ஈவு, இரக்கம் பார்த்து உறவினர்கள், நண்பர்கள் என்று நினைத்துஎடுத்தால் நிச்சயம் தோல்விதான் வந்தடையும். இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று கூறினார்.
நடிகர் கஸ்தூரி கூறுகையில் ,
வேலுபிரபாகரன் எனக்கு அறிவுமிக்க ஆசிரியர், நான் அவருக்கு மக்கு மாணவி. பெரியார் கூறிய கருத்துக்கள், பெரியரை பற்றி நான் அறிந்தது வேலுபிரபாகரரை ஒப்பிட்டு பார்த்தால் நான் பூஜ்ஜியம்தான். அவர் அளவுக்கு கற்பைப் பற்றி பேச எனக்கு தெரியாது. அதனால் நான் கருப்பில் இருந்து ஆரம்பிக்கிறேன். சினிமாவின் தொடக்கக் காலத்தில் கூட கே.பி.சுந்தராம்பாள், டி.ஆர்.ராஜகுமாரி போன்றநம் நாட்டு நிறத்தில் இருப்பவர்கள் நடித்தார். ஆனால், எப்போது நாம் வெள்ளையர்களை பார்த்து காப்பி அடிக்க ஆரம்பிச்சோமோ அப்போதிருந்துதான் இந்த பிரச்சனையும் ஆரம்பித்தது. இயக்குநர்மகேந்திரன் ஷோபோ, அஸ்வினி, சுஹாசினி போன்ற நம் மண்ணின் நிறத்தையுடைய திறமையான கதாநாயகிகளை கொண்டு வந்தார். அதேபோல தான் சரிதா, சுஜாதா, சுகன்யா போன்றோர்களும். ஆனால், ரஜினிகாந்த் முதல் பிரகாஷ்ராஜ் வரை கருப்பான நாயகர்களை தமிழ்நாட்டிற்கு பரிசாக தந்த பாரதிராஜா, தானும் கருப்பு, தன் மகனும் கருப்பு ஆனால், கதாநாயகி மட்டும் ரியா சென் என்றுவெள்ளை நிறத்தில் வடநாட்டு பெண்ணை அறிமுகம் செய்து இந்த கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மேல் எனக்கு உண்டு. அதேபோல், ஷங்கர் ஒருபடி மேல சென்றுஹாலிவுட் நடிகை எமி ஜாக்சனையும் நம்ம ஊர் பெண் என்று தாவணி போட்டு இவர் தமிழ்நாட்டு பெண் என்று மாற்றிவிட்டார்.
பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்று பகுத்தறிவு பேச வேண்டிய ஒரு கருவியாக இருக்க வேண்டிய சினிமா இன்று, பாசாங்குகளை மட்டுமே பரப்பிக்கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு வருத்தம்இருக்கிறது. மற்றபடி சினிமாவை பார்த்துதான் நான் பெண்ணை கற்பழிக்கின்றேன் என்று கூறினால், அப்படிப்பட்ட வலிமையற்ற மனிதர்கள் சினிமாவை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அப்படியேஇருந்தாலும் அந்த வன்மத்தை ஒரு குழந்தையின் மீதா காட்டுவீர்கள்?
நிஜத்தில் நடப்பதைத்தான் சினிமாவாக எடுக்கிறோம் என்று கூற்றை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். ஹாசினி விஷயத்தை படமாக எடுக்க முடியுமா? பொள்ளாச்சியில் நடந்ததை படமாகஎடுக்கமுடியுமா? அப்படி எடுத்தால் நம்மால் பார்க்க முடியுமா? இதுபோன்ற காட்சிகளில் எம்.ஜி.ஆர். நடித்திருப்பாரா? அல்லது பல லட்சகணக்கான ரசிகர்கள் அதை ஏற்றுக் கொண்டுதான்இருப்பார்களா?
பெண் விடுதலை என்று கூறி எங்களை கட்டிபோடாதீர்கள். கற்பழிக்காமல் இருந்தாலே போதும். சுயவிருப்பத்திற்கும் அத்துமீறலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பெண்கள்ஊடகத்துறையிலோ, சினிமாத் துறையிலோ முன்னேறினால், இவர்கள் எப்படி இந்த இடத்திற்கு வந்தார்கள் தெரியுமா? என்று கொச்சையாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். பெண்களுக்குஇடஒதுக்கீடு, சமஉரிமை இதெல்லாம் வேண்டாம். குறைந்தபட்ச மரியாதை கொடுத்தாலே போதும்.
இச்சூழலில், உண்மையை மட்டுமே நம்பி அமெரிக்காவிலிருந்து வந்து, ‘முடிவில்லா புன்னகை’ என்ற நல்ல படத்தை கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவு கொடுத்து இப்படத்தைவெற்றியடைய செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.
‘முடிவில்லா புன்னகை’ படத்தில் ஆரோக்கியசாமி க்ளமென்ட், டிட்டோ, ரக்ஷிதா, ‘கூல்’ சுரேஷ், டெலிபோன் ராஜ், நெல்லை சிவா, வேல்முருகன் மற்றும் சாந்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
‘முடிவில்லா புன்னகை’ படத்தில் ஆரோக்கியசாமி க்ளமென்ட் நடித்தது மட்டுமல்லாமல் தயாரிப்பு, கதை, இயக்கம், படத்தொகுப்பு ஆகியவற்றையும் செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், ஜேக்கப்சாமுவல் உடன் இணைந்து இசை அமைத்திருக்கிறார் மற்றும் பாடலையும் எழுதியிருக்கிறார். இளையகம்பனும் இப்படத்திற்காக பாடல்கள் எழுதியிருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேரில் வந்து வாழ்த்திய வேலு பிரபாகரன், ஜெயதேவி, லிவிங்ஸ்டன், கஸ்தூரி மற்றும் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார் ஆரோக்கியசாமிக்ளமென்ட்.