ஹிட் லிஸ்ட்’ விமர்சனம்

 

இயக்குனர் விக்ரமனின் மகனான அறிமுக நாயகன் விஜய் கனிஷ்கா வள்ளலார் கொள்கைகளை பின்பற்றி எந்த உயிரையும் கொல்லக் கூடாது யாருக்கும் எந்த வித தீங்கும் விளைவிக்கக்கூடாது என்பதால் சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்கிற தீவிர கொள்கையுடன் தனது அம்மா சித்தாரா,தங்கை அபிநக்‌ஷத்ரா ஆகியோருடன் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இப்படி அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் விஜய் கனிஷ்காவின் வாழ்க்கையில் திடீரென்று ஒரு முகமூடி அணிந்த மனிதன் நுழைந்து அவரது அம்மா மற்றும் தங்கையை கடத்தி வைத்துக்கொண்டு உன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் நீ இரண்டு கொலைகள் செய்ய வேண்டும் என்று விஜய் கனிஷ்காவிடம் மிரட்டல் விடுகின்றான் .
அமைதியான குணம் கொண்ட விஜய் கனிஷ்காவை முகமூடி மனிதன் இரண்டு கொலைகளை என்ன காரணத்திற்காக செய்யச் சொல்கிறான் அவர் அந்த கொலைகளை செய்தாசெய்தாரா அம்மா, தங்கையை விஜய் கனிஷ்கா காப்பாற்றினாரா இந்த வழக்கை விசாரித்த வந்த காவல்துறை அதிகாரி சரத்குமார் இறுதியில் முகமூடி மனிதன் யார் என்பதை கண்டுபிடித்தாரா என்பதே ‘ஹிட் லிஸ்ட்’ படத்தின் மீதிக் கதை.
அறிமுக நாயகன் விஜய் கனிஷ்கா உணர்வுபூர்வமான நடிப்பில் அறிமுக நாயகன் போல் இல்லாமல் அனுபவம் வாய்ந்த நடிகராக கதாபாத்திரத்துடன் இணைந்து மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஸ்மிருதி வெங்கட் அவரது பணியினை சிறப்பாக செய்துள்ளார்.
கதையின் மற்ற கதாபாத்திரங்களான சரத்குமார்,இயக்குனர்சமுத்திரக்கனி,இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்,ராமச்சந்திர ராஜு,சித்தாரா,அபிநக்‌ஷத்ரா,ஐஸ்வர்யா தத்தா,அனுபமா குமார்,பாலசரவணன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி என நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.கே.ராம்சரண் ஒளிப்பதிவும் சி.சத்யா அவர்களின் இசையும் படத்திற்கு பக்க பலம் சேர்த்துள்ளது.
எதிர்பாராத க்ளைமாக்ஸ்
சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக இயக்கியுள்ள இயக்குனர்கள் சூர்யகதிர் காக்கல்லர் ,கே.கார்த்திகேயன் அவர்களுக்கு பாராட்டுகள்.
ஹிட் லிஸ்ட் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர்