kollywood news

கட்டில் திரைப்படக்குழு நடத்தும் “ஆடல் பாடல் கட்டில்”

கட்டில் திரைப்படக்குழு நடத்தும்
“ஆடல் பாடல் கட்டில்” சிறுவர்களுக்கான கொரோனா விழிப்புணர்வு
நடனப்போட்டி

ரூ.50.000 பரிசுத்தொகை

நமது மத்திய,மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , வீட்டில் தனித்து இருப்பவர்களுக்காக மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள “கட்டில்” திரைப்படக்குழு பல்வேறு போட்டிகளை அறிவித்து வருகிறது.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா முழுக்க முழுக்க சிறுவர்களுக்காக உருவாக்கிய கொரோனா கானா பாடலுக்கு சிறப்பாக நடனமாடி வீடியோ அனுப்பி வைப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

உலககெங்கிலும் வாழும் அனைவரும் இப்போட்டியில் பங்கேற்கலாம். நடனமாடிய வீடியோவை
+91 9150566759 என்ற whatsapp நம்பருக்கு  மே 25(2020) ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் அனுப்பி வைக்கலாம். தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.

முதல் பரிசு : 25,000
இரண்டாம் பரிசு : 15,000
மூன்றாம் பரிசு : 10,000

கட்டில் திரைப்படப்பாடல் வெளியீட்டு விழாவில் பரிசுத்தொகை காசோலையாக வழங்கப்படும்.
உலகமே முடங்கி கிடக்கும் இந்த தருணத்தில் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு இம்மாதிரியான போட்டிகளையும் அறிவித்து குழந்தைகளை மகிழ்விப்பதில் “கட்டில்” திரைப்படக்குழு பெருமை கொள்கிறது என்று அப்படத்தின் இயக்குனரும் கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு தெரிவித்தார்

Get real time updates directly on you device, subscribe now.