தணல் விமர்சனம்

அதர்வா கதையின் நாயகனாக கான்ஸ்டபிளாக பொறுப்பேற்க அதர்வாவுடன் சேர்த்து ஆறு பேர் காவல் நிலையத்திற்கு வருகின்றனர்.அவர்கள் பணியில் சேருவதற்கு முன்பே இரவு ரோந்து பணிக்கு அனுப்புகிறார் உயர் போலீஸ் அதிகாரி. அப்பொழுது சாலையில் உள்ள கழிவுநீர் சுரங்கத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியேறுவதை பார்த்து அவரிடம் விசாரிக்க முயற்சிக்கும் போது, அந்த நபர் தப்பி அருகில் உள்ள இரும்பு தடுப்புக்கள் நிறைந்த ஒரு குடிசை பகுதிக்குள் சென்று மாயமாகிறார். அவரை பின் தொடர்ந்து செல்லும் அதர்வா மற்றும் குழு அங்கே ஆள் நடமாட்டம் இல்லாத வசிப்பிடமாக இருப்பதை உணர்ந்து இரண்டு இரண்டு பேர்களாக பிரிந்து மர்ம நபரை தேடுகின்றனர்.குடிசை பகுதிக்குள் அவர்கள் அஷ்வின் காக்கமனு தலைமையில் சில சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் சதித்திட்டங்கள் நடைபெறுவதை காண்கிறார்கள். அதற்குள் அங்கிருக்கும் அடியாட்களால் போலீஸ் கான்ஸ்டபிள்கள்களை ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுகிறார்கள். அங்கிருந்து வெளியே வர முடியாமல் மாட்டிக் கொண்டு வழி தெரியாமல் தப்பிக்க முடியாமல் திணரும் அதர்வா அங்கே ஒரு வீட்டிலிருக்கும் பெண்மணியை பார்த்து உதவி கேட்கிறார்.ஆனால் அந்த பெண்மணி அங்கிருந்து உடனே சென்று விடுமாறு எச்சரிக்கிறார்.அதே சமயம்கான்ஸ்டபிள்களின் வேலையில் சேர இருக்கும் உத்தரவு கடிதம் அங்கே இருப்பதையும்,தன் காதலி கைதியாக இருப்பதையும் அறிந்து அதர்வா அதிர்ச்சியாகிறார். அந்த குடியிருப்பு பகுதியில் நடக்கும் சதி வேலைகள் என்ன அவர்கள் யாரை குறி வைத்து பழி வாங்க காத்திருக்கிறார்கள் அதர்வாவால் அங்கிருந்து உயிரோடு தப்ப முடிந்ததா காதலியையும், உயிரோடு இருக்கும் சில கான்ஸ்டபிள்களையும் மீட்டாரா அதர்வாவுக்கும் அஸ்வின் காக்கமனுவிற்கும் இருக்கும் பகை என்ன அதற்காக யாரை பழி வாங்க அஸ்வின்காக்கமனு நினைக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
அகிலனாக அதர்வாவின் நிறைவான நடிப்பு படத்திற்கு பலம்.
லாவண்யாவின் பங்களிப்பு நிறைவு.
அஸ்வின் காக்கமனு,ஷா ரா,பாரத்,லக்ஷ்மி பிரியா,பரணி,அழகம் பெருமாள் மற்றும் பலரின் நடிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையும்,சக்தி சரவணன் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.அற்புதமான ஒட்டு மொத்த திரைக்கதையும் பரபரப்பாக கொடுத்து தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் இயக்குனர் ரவீந்திரமாதவா அவர்களுக்கு பாராட்டுகள்.
தணல் பழி வாங்கும் படலத்தில் அனல்.