அனந்தா விமர்சனம்

மும்பையைச் சேர்ந்த ஜெகபதி பாபு, கேரளாவைச் சேர்ந்த ஒய்.ஜி. மகேந்திரன், சென்னையைச் சேர்ந்த நடன கலைஞர் அபிராமி வெங்கடாசலம்,காசியைச் சேர்ந்த சுஹாசினி,மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த தலைவாசல் விஜய்.ஆகிய 5 பக்தர்கள் தங்கள் வாழ்வில் சத்ய சாய்பாபாவால் நடந்த அற்புதங்களை,அவர் ஆசியால் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் என்ன அவர்கள் எப்படி சத்ய சாயின் பக்தர்களாக மாறினர் பற்றி அவர்களின் அனுபவங்களை கூறத் தொடங்குகிறார்கள்.இதில்
மீண்டும் எழும் ஒரு நடன கலைஞர், இழப்பில் கருணையை கண்டறியும் ஒரு மனிதன்,ஒரு அற்புதத்தை காணும் தாய், இயற்கையின் அமைதியில் நம்பிக்கையை கண்டறியும் ஒரு வெளிநாட்டுக்காரர், கண்ணுக்கு தெரியாத அருளால் காப்பாற்றப்படும் ஒரு தொழிலதிபர் ஆகியோரை பற்றி 5 கதைகள் அடங்கியுள்ளது.இவர்கள் எப்படி சத்ய சாயின் பக்தர்களாக மாறினார்கள் சத்ய சாயின் மகிமைகள் அவர்களின் வாழ்க்கையில் என்ன என்ன திருப்பங்களை ஏற்படுத்தின சாய் பாபாவின் மகிமைகள் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
ஜெகபதி பாபு, சுஹாசினி மணிரத்னம், அபிராமி வெங்கடாசலம், ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய் ஆகியோர் வெவ்வேறு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.
தேவாவின் இசையும்,ஒளிப்பதிவாளர் சஞ்சயின் ஒளிப்பதிவும் கதைக்கு வெகுவான பலம் சேர்த்துள்ளது.
இப்படி ஒரு நல்ல படைப்பை உணர்வுப்பூர்வமாக சிறப்பான திரைக்கதை அமைக்கப்பட்ட காட்சிகளுடன் கொடுத்து இருக்கும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு பாராட்டுகள்.
அனந்தா அனைவரையும் ஈர்க்கும் ஆன்மீக உணர்வு.