ஐ ஆம் கேம் விமர்சனம்

நாயகன் துல்கர் சல்மான் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த போதிலும் சுய முகவரியை தேடும் தீவிர சூதாட்டப் பழக்கத்தால் 24 மணி நேரத்திற்குள் அடைக்க வேண்டிய மிகப்பெரிய கடனில் மூழ்கி தன் கைவசமிருக்கும் 60 லட்ச ரூபாயையும் சிபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்து கடனை அடைக்க வேறு வழியின்றி சூதாட்ட விடுதியை மிரட்டிப் பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பிக்கும் போது ஏற்படும் ஒரு பெரிய விபத்தில் தன் வலது கையை இழக்கிறார்.அவருக்கு மருத்துவர்கள் மாற்று அறுவை சிகிச்சை மூலம் வேறு ஒருவரின் கையைப் பொருத்திய பின் அந்த கை துல்கரின் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்பட்டு ஆரம்பத்தில் சில நன்மைகள் செய்தாலும் எதிர்பாராத விதமாக பிரபல கிரிக்கெட் லீக் அணியின் உரிமையாளர் மிஷ்கினை கொடூரமாகத் தாக்க முற்படுகிறது.இதன் பின்னணி என்னவென்று ஆராயும்போது திறமையான இளம் கிரிக்கெட் வீரர் ஆண்டனி வர்கீஸ் கனவுகளையும் வாழ்க்கையையும் கிரிக்கெட் சூதாட்டச் சதிகளின் மூலம் மிஷ்கின் சீரழித்தது தேரிய வருகிறது ஆண்டனி வர்கீஸ்க்கு நேர்ந்த சோகம் விபத்து அந்த கைக்குச் சொந்தமான பின்னணி என்பது வெளிப்படுகிறது.தன் உடலோடு பொருந்தியிருக்கும் அந்த கை வெளிப்படுத்தும் கோபத்தையும் பழிவாங்கும் துடிப்பையும் உணர்ந்த துல்கர் தன் மூளையின் கட்டளைக்கு அடங்காத அந்த கையின் தன்னிச்சையான ஆக்ரோஷப் போராட்டத்திற்கு இடையே சூதாட்ட உலகத்தின் பின்னணியில் உள்ள அநீதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து மிஷ்கினின் சதியை முறியடித்து சிக்கலிலிருந்து எவ்வாறு மீள்கிறார் என்பதே மீதிக்கதை.
சூதாட்ட மோகத்தில் திளைக்கும் பணக்கார இளைஞராக மிளிரும் துல்கர் சல்மான் தனது அட்டகாசமான வசீகரத்தாலும் துணிச்சலான ஆளுமையாலும் சிறப்பாக தனது நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
கதாநாயகியாக கயாடு லோஹர் தனது இயல்பான நடிப்பினால் அனைவரது கவனத்தையும் கவர்கிறார்.
மற்றும் மிஷ்கின்,ஆண்டனி வர்கீஸ்,சம்யுக்தா விஸ்வநாதன்,
வினய் சஃபோர்ட்,
கதிர் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் அவர்களின் இசையும்,ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவும் கதைக்கு பலம்.
இப்படி ஒரு கதைகளத்தை கையில் எடுத்து சஜீர் பாபா,பிலால் மொய்து,இஸ்மாயில் அபூபக்கர் ஆகியோரின் திரைக்கதை உருவாக்கத்தில் சிறந்த முறையில் இயக்கி இருக்கும் இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் அவர்களுக்கு பாராட்டுகள்.
ஐ ஆம் கேம் விறுவிறுப்பான அதிரடி கேம்.